Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

24 மாதங்களில் கடன் ரூ.20,000 கோடியாக குறையும்!

மொபைல் போன் ஆப்ரேட்டர் நிறுவனங்களில் நான்காவது மிகப் பெரிய நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். செப்டம்பர் 30,2014-ம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனத்தின் தற்போதைய மார்க்கெட் கேப்பிடலைசேஷன் 23,758.88 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயத்தில் ஆகஸ்ட்,2014 நிலவரப்படி நிறுவனத்தின் கடன் 35,000 கோடி ரூபாயாகும்.


இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, அடுத்த 24 மாதத்தில் கடன் அளவை ரூ.20,000 கோடிக்கு கொண்டுவருவதுதான் என்பதை அதன் பங்குதாரர்களுக்கு தெரிவித்திருக்கிறார். இன்றைய நிலையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு தோராயமாக 30,000 கோடி ரூபாய் எனவும், வரும் வருடத்தில் நன்காவது தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவைகளை (fourth-generation (4G) telecommunications services) துவங்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ