Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி போட்டியில் ஃப்ளிப்கார்ட் vs அமேசான்

தீபாவளி என்றால் பட்டாசுகளுக்கும், இனிப்புகளுக்கும் அடுத்தபடியாக நியாபகம் வருவது தள்ளுபடிகள் தான், பெரிய நிறுவனங்களின் அடையாலமே தீபாவளி தள்ளுபடியாக தான் உள்ளது. இதனை தற்போது ஆன்லைன் நிறுவனங்களும் கையில் எடுத்துள்ளன. அதில் முக்கியமாக களமிறங்கி இருப்பது இந்தியாவில் ஆன்லைன் மூலம் அதிகம் விற்பனை செய்யும் நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தான். இவை தீபாவளிக்கென்று தனி ஆஃபர்களோடு களமிறங்கியுள்ளன.
 
இந்தியாவில் அதிகம் விற்பனை நடக்கப்போகும் தேதியாக அக்டோபர் 6ம் தேதி கணிக்கப்பட்டுள்ளது. அந்த நாளை அனைவரும் பெரிய பில்லியன் தினம் என வர்ணிக்கிரார்கள் காரணம் அன்றைக்கு தான் ஃப்ளிப்கார்ட்டும், அமேசானும் களத்தில் மோதப்போகும் தினமாக கூறப்படுகிறது.
 
டிஸ்கவுண்ட்களை ஏற்கனவே அள்ளி கொடுத்து வரும் அமேசாணுக்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட்டும் ஆஃபர்களை அள்லி வீச போகிரது அக்டோபர் 4ம் தேதி முதல் 6ம் தேதிவரை வாட்ச்களுக்கு 40 சதவிகிதம் டிஸ்கவுண்ட் என்றும், அதே போன்று ஷூ பொன்ற பொருட்களுக்கும் அதிகமான ஆஃபர்களை அள்ளி வழங்க போகிறது ஃப்ளிப்கார்ட்.
 
 
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக பொருட்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கையை விட இந்த்அ தினத்தில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 70 பிரிவுகளுக்கு மேல் இடம் பிடிக்கும் பொருட்களால் 250 சதவிகிதம் என்ற அளவிற்கு வாடிக்கையாளரின் பொருள் வாங்குவதை அதிகரிகரிக்கத்திட்டமிட்டுள்ளன.
 
முன்பு கடைக்கு சென்று வாங்கிய பொருட்களையும், ஆடைகலையும் வீட்டுக்கு கொரியரில் கொண்டு வந்து கொடுக்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் போட்டி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் கடைகளில் 2 பேருக்கு பொருட்கள் வாங்கும் செலவில் இவர்களிடம் 3 பேருக்கு வாங்கிவிடலாம் என்ற கணக்கு தான்.என்ன தான் இருந்தாலும் நேரில் சென்றால் தான் தரம் தெரியும் என்கின்ற சில வாடிக்கையாளர்களும் இருக்கும் இந்த சந்தையில் என்ன செய்யப்போகின்றன இந்த நிறுவனங்கள் என பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் சிலர்.
 
எப்படியோ குறைந்த விலையில் கொடுப்பதாக சொல்லும் அக்டோபர் 6ம் தேதி பிக் பில்லியன் டே நிறைவேறுமா என்பது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் கையில் தான் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ