Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி கேஒய்சி விதிமுறைகளை எளிமையாக்கிய ஆர்பிஐ!

வாடிக்கையாளர்களின் கேஓய்சி ஆவணங்களை புதுப்பிக்குமாறு வங்கிகள் கூடிய விரையில் கேட்கக் கூடும்.  அதாவது வங்கிகள்  ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் குறித்த அடிப்படை தகவல்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்துக் கொள்ளுமாறு  கேட்க இருக்கிறது. 


அதாவது வங்கி கணக்கின் பரிமாற்ற அடிப்படையில் குறைவான ரிஸ்க் உடைய வாடிக்கையாளர்கல் மீண்டும் கேஒய்சி கொடுக்க தேவை இல்லை. மேலும், முகவரி உள்ளிட்ட எதிலும் மாற்றம் இல்லை என்ரால் கேஒய்சியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என வாடிக்கையாளர் சுய உறுதிமொழி அளித்தால் போதும். மேலும் இப்படி சுய உறுதிமொழியை நேரில் வந்து கொடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களை வலியுறுத்த கூடாது. தபால் அல்லது மெயில் மூலமாக அனுப்பினாலும் அதை வங்கிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்பிஐ அதன் சமீபத்திய நிதி மற்றும் கடன் கொள்கையில் கூறியுள்ளது. 
மேலும் ஒரு வங்கியில் இரண்டாவது கணக்கு துவங்க நினைக்கும் வாடிக்கையாளர்களிடம் புதிய கேஒய்சி ஆவணங்களை  கேட்க கூடாது. ஏற்கனவே உள்ள ஆவணங்களின் அடிப்படையில் வங்கி கணக்கை துவங்க அனுமதிக்க வேண்டும் எனவும் வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தி இருக்கிறது.

 
கேஒய்சி ஆவணங்களை சரியாக சமர்பிக்காதவர்கள் அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதாவது கேஒய்சி ஆவணங்கள் சரியாக இல்லையென்றால் வங்கி கணக்கில் பணம் போட முடியும். ஆனால், பணம் எடுக்கும் போது கட்டாயம் கேஒய்சி ஆவணங்கள் முழுமையாக சமர்பித்திருக்க வேண்டும். அப்போதுதான்  பணத்தை எடுக்க முடியும்.  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ