Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா வருகிறார்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வரத் திட்டமிட்டுள்ளார். வருகிற அக்டோம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள இணையம் சார்ந்த 'Internet.Org' என்ற கருத்தரங்கிற்கு வருகை தரும் இவர் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்க உள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அமைச்சரவையில் உள்ள சில முக்கிய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
 'Internet.Org'  என்ற திட்டம் மிகக்குறைந்த செலவில் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் இணையத்தைக் கொண்டு சேர்க்க முடியும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான பேஸ்புக், எரிக்ஸன், மீடியாடெக், நோக்கியா, ஒபேரா, குவால்காம் மற்றும் சாம்சங் ஆகியவை இணைந்து பணியாற்றவுள்ளன. 
 
கடந்த ஜூலை மாதத்தில் பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி சாண்ட்பெர்க் இந்தியா சுற்றுப்பயணம் வந்தார். அப்போது மோடியைச் ச்ந்தித்த அவர், தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டதற்கும் , தற்சமயம் தொடர்ந்து அதில் செய்தி வெளியிட்டு வருவதற்கும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  அந்தச் சந்திப்பின்போது, அரசு நிர்வாகத்தில் பேஸ்புக்கின் பங்கு மற்றும் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கான சில திட்டங்கள் குறித்டு அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிற்கு வரும் மார்க் ஜுக்கர்பெர்க்கிடமும் இதனைப் பற்றி ஆலோசிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து இந்தியாவிற்கு வரும் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க் ஆவார்.
 
இந்தியா சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நாட்டில் மிக முக்கிய இடத்தில் உள்ளது. ஒரு பில்லியனிற்கும் அதிகமான பயனீட்டாளர்களைக் கொண்டு இருக்கும்  இந்த வலைத்தளம் இந்தியாவில் மட்டும் 100 மில்லியனிற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதிலும் 57% விழுக்காடு மக்கள் மொபைல் சாதனங்களில் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

-மா.அ.மோகன் பிரபாகரன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP