Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைனில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானம்: அமேசான்

இதுவரை எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள் வாங்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஆன்லைன், இனி உணவுப்பொருட்களையும் குளிர்பானங்களையும் வழங்கும் என்றால் நம்புவீர்களா? ஆம் அக்டோபர் மாத நடுவில் அமேசான் உணவுப்பொருட்களை விற்கப்போகிறதாம். 
 
ஏற்கெனவே கோக் டையட் எனும் குளிர்பானத்தை ஆன்லைனில் விற்க துவங்கியுள்ள நிலையில் இந்த முயற்சியில் அக்டோபரில் களமிறங்கவுள்ளதாம்.
 
இந்த வாரம் இந்தியாவில் அமேசானின் முதலாமாண்டு விழாவை கொண்டாட இந்தியா வந்த அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கும், எஸ்.எம்.இக்களுக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் இ-காமர்ஸ் வேகமெடுப்பதை உணர்ந்த நிறுவனங்கள் அனைத்து பிரிவுகளிலும் தங்களது பிராண்டுகளை ஆன்லைனில் விற்க முடிவெடுத்துள்ளன. இனி ஆன்லைனில் உணவு பொருட்கள் கிடைக்கும் என்றால் மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் கடைகளை தேட வேண்டிய அவசியமிருக்காது என்கின்றனர் சிலர்.
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ