Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 12

                                   கமாடிட்டி வியாபாரம் 12


தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

கமாடிட்டி வியாபாரம்:

 
கமாடிட்டி வியாபாரம் என்பது ஃபியுச்சர்ஸ் வியாபாரம் ஆகும்.  இத்தகைய வியாபாரம் செயல்பாட்டுக்கு வந்ததிற்கு காரணம், பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு,  சந்தையினால் வரக்கூடிய நஷ்டத்தை தவிர்க்கவே ஆகும்.
இதைதான் ஹெட்ஜிங் என்று சொல்வோம்.
ஃபியூச்சர்ஸ் வியாபாரம் மூன்று விதமான வழிமுறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.
 1. ஹெட்ஜிங்
 2. ஆர்பிட்ரேஜ்
 3. ஸ்பெகுலேஷன்
நாம் ஏற்கெனவே ஹெட்ஜிங்கை விளக்கமாக பார்த்து விட்டோம்.
 
 
ஆர்பிட்ரேஜ்:
 
ஆர்பிட்ரேஜ் என்பது, ஃபியூச்சர்ஸ் வியாபாரத்திற்கும், ஸ்பாட் மார்க்கெட்டுக்கு உள்ள வித்தியாசம், நியாயமான வித்தியாத்தை விட அதிக அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ இருந்தால், அதை உபயோகப்படுத்தி செய்யும் வியாபாரம் ஆகும்.
 
ஸ்பெகுலேஷன்:
 
இந்த வியாபாரம்,  சம்பந்தப்பட்ட பொருட்களுடன் நேரிடையாக தொடர்பில்லாமால் இருக்கும், பண பலம் உள்ளவர்கள் முதல் சமானியர்கள்வரை செய்வது ஆகும்.
அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை ஏறும் என்று நம்பும் போது வாங்கி விற்பதும், விலை இறங்கும் என்று நம்பும்போது, விற்று வாங்கும் முறை ஆகும்.
 
இதில் ஈடுபடும்போது, நாம் நினைத்த திசையில் விலை பயணித்தால் லாபம், இல்லையென்றால் நட்டம் வரும்.
ஏற்கெனவே நாம் ஹெட்ஜிங் பற்றி விளக்கமாக பார்த்துவிட்டோம்.  இப்போது, ஆர்பிட்ரேஜ் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.  அடுத்து ஸ்பெகுலேஷன் மற்றும் அதை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்று பார்க்கலாம்.
இனி ஆர்பிட்ரேஜ் பற்றி பார்க்கலாம்.
 
நாம் ஃபியூச்சர்ஸ் வியாபாரத்தில், ஒரு பொருளின் ஃபியூச்சர்ஸ் விலையானது, காஸ்ட் ஆஃப் கேரி என்ற சூத்திரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று முன்பே படித்துள்ளோம்.
 
காஸ்ட் ஆஃப் கேரி அடிப்படையில், நிர்ணயிக்கப்படும் விலையை நியாயமான விலை என்று சொல்லுவோம்.  ஒரு பொருளின்  நியாயமான விலையை அந்த பொருளின் ஸ்பாட் மார்க்கெட் விலையுடன்,  பியூச்சர்ஸ் மார்கெட்டில் எந்த மாத கான்டிராக்ட்டை எடுக்கிறோமோ, அந்த மாதம் வரை அந்த பொருளை வைத்திருப்பதற்கு ஆகும் செலவை கூட்டி நிர்ணயிக்கிறோம்.  இந்த நியாயமான விலை என்பது, சந்தையில் எப்போதும் அப்படியே பிரதிபலிக்குமா என்பது ஒரு கேள்வி?
 
ஃபியூச்சர்ஸ் மார்க்கெட்டில் ஒரு பொருளின் விலை எந்தெந்த காரணிகளால் மாற்றம் அடையலாம் என்று முன்பே விளக்கமாக பார்த்திருக்கிறோம்.  இருந்தாலும் அதை சற்றே நினைவுபடுத்துகிறேன்.
ஒரு பொருளின் ஸ்பாட் விலை என்பது, அந்த பொருளை காசு கொடுத்து நாம் வாங்குவது ஆகும்.  அதாவது, நாம் நகைச்சுவையாக சொல்வதாக இருந்தால் கையில் காசு வாயில தோசை என்று சொல்லுவோம்.  அதாவது காசை கொடுத்து உடனடியாக நாம் பொருளை வாங்குவது ஆகும்.  நாம் கடைக்கு போய் ஒரு 1 கிராம் தங்கத்தை ரூ.2500/- வாங்கி வீட்டுக்கு எடுத்து செல்வதைதான் ஸ்பாட் மார்கெட் என்று சொல்லுவோம்.
 
அதுவே உங்க மகளுக்கு அடுத்த மாதம் கல்யாணம், உங்களுக்கு 100 கிராம் தங்கம் வேண்டும்.  நீங்கள் ஒரு மாதம் கழித்து 100 கிராம் தங்கம் வேண்டும், ஆனால் விலையை இன்றே சொல்லுங்கள் என்று கேட்டால், தங்கம் விற்பவர், இன்றைய ஒரு கிராம் விலையான ரூ.2500வுடன், அந்த தங்கத்தை இன்று வாங்கி ஒரு மாதம் வைத்து உங்களுக்கு கொடுப்பதற்கான செலவுகளை, அதாவது தங்கத்தை இன்றே வாங்கி ஒரு மாதம் வைத்திருப்பதற்கான வட்டி செலவு,   அதை பத்திரமாக ஒரு லாக்கரில் வைத்து கொடுப்பதற்கான இதர செலவுகளை கணக்குபோட்டு சுமார் ரூ.50 உடன் சேர்த்து ஒரு கிராம் விலையை ரூ.2550 என்ற சொல்லலாம்.
எனவே இப்போது ஒரு கிராம் தங்கம் ஸ்பாட் விலை ரூ.2500
ஒரு மாதம் ஃபியூச்சர்ஸ் விலை என்பது ரூ.2550
இதைதான் நாம் நியாயமான விலை என்று சொல்கிறோம்.
 
இனி...  ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளை பற்றி பார்க்கலாம்.
 
தற்போது ஒருமாத ஃபியூச்சர்ஸ் விலை என்பது ரூ.2550 என்று பார்த்தோம்.  இது ஸ்பாட் விலையைவிட ரூ.50 கூடுதலாக இருந்தது.  இந்த ரூ.50 வித்தியாசம் என்பது நியாமான விலை நிலைப்பாடு ஆகும்.
தங்கம் ஒரு மாத ஃபியூச்சர்ஸ் என்பது தினம் வியாபாரம் ஆகிக்கொண்டே இருக்கும். அப்படி வியாபாரம் ஆகும்போது ரூ.2550 என்ற விலையிலோ அல்லது ரூ2550 கொஞ்சம் கூடியோ அல்லது குறைந்தோ வியாபாரம் ஆகலாம்.  அது அந்தந்த நாட்களின் டிமாண்ட் மற்றும் சப்ளையை பொறுத்த விஷயம்.  இப்படி குறைந்த வித்தியாசத்தில் வியாபாரம் ஆகும்வரை நமக்கு வாய்ப்பு எதும் இல்லை.
 
ஒருவேளை....
 
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2500 ஆக இருக்கும்போது, ஒரு மாதம் கான்டிராக்ட் விலை ரூ.2550 என்ற நியாயமான விலைக்கு பதிலாக ரூ.2600 என்ற விலையில் வியாபாரம் ஆகும்போது, நமக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.
 
என்ன வாய்ப்பு அது?
 
நாம் இரண்டு விதமான செயல்பாடுகளை செய்யப்போகிறோம்.
ஒன்று:    ஸ்பாட் மார்கெட்டில் தங்கத்தை ஒரு கிராம் ரூ.2500 என்ற விலைக்கு வாங்குகிறோம்
இரண்டு:  தற்போது, ஒரு மாத கான்டிராக்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை நியாயமான விலையைவிட ரூ.50 அதிகமாக வியாபாரம் ஆவதால், ரூ.2600 என்ற விலையில் நாம் விற்கலாம் (ஷாட் போகலாம்).
இந்த இரண்டு செயல்பாடுகளின் ஆரம்பவேலை முடிந்துவிட்டது
 
இதனால் நமக்கு என்ன லாபம்?
 
முதலில் நாம் தங்கத்தை ஸ்பாட் மார்கெட்டில் ஒரு கிராம் ரூ.2500க்கு வாங்கிவிட்டோம்.  உடனடியாக ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில் ஒருமாத கான்டிராக்டில் ஒரு கிராம் தங்கத்தை ரூ.2600க்கு விற்றுவிட்டோம்.
 
இப்போது ஸ்பாட் மார்கெட்டில் வாங்கிய ஒரு கிராம் தங்கத்தின் விலையான ரூ.2500க்கும் ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில் வாங்கிய ஒரு கிராம் தங்கத்தின் விலையான ரூ.2600 க்கும் உள்ள விலைவித்தியாசமான ரூ.100 - ஐ நாம் லாக் செய்துவிட்டோம்.   
 
இது நம்முடைய லாபமா? 
 
ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில் ஒரு கிராம் தங்கத்தை நாம் ரூ.2600 என்ற விலைக்கு விற்றாலும், நமக்கு லாபமாக கணக்கிடும்போது, நியாயமான விலையான ரூ.2550-ல் உள்ள காஸ்ட் கேரி தொகையான ரூ.50- கழித்துக்கொள்ள வேண்டும்.  ஆகவே லாக் செய்த ரூ.100-ல், நாம் எடுக்க முடிந்த லாபம் என்பது ரூ.50- ஆகும்.
இது என்ன?  
ஸ்பாட் மார்கெட்டில ஒரு கிராம் தங்கத்தை ரூ.2500க்கு வாங்கிவிட்டு, ஒரு மாத ஃபியூச்சர்ஸ் ஒரு கிராம் தங்கத்தை ரூ.2600-க்கு விற்றுவிட்டால், லாபம் நம் பைக்கு வந்துவிடுமா?
வராது.
இதுவரை நாம் செய்து இருப்பது டிரேடின் ஒருபகுதிதான்.   அதாவது நாம் எதை வாங்கினாலும் விற்றால்தான் டிரேட் முழுமை பெறும் (இதை லாங் என்கிறோம்).  அதுபோலவே ஒரு டிரேடில் முதலில் விற்றால், பின்பு அதை வாங்கி நேர் செய்யவேண்டும் (இதை ஷாட் என்கிறோம்).
 
எனவே, நாம் ஏற்கெனவே ஸ்பாட் மார்கெட்டில் ரூ.2500-க்கு வாங்கிய தங்கத்தை ஸ்பாட் மார்கெட்டில் விற்கவேண்டும்.  அதேநேரம் ஒருமாத ஃப்யூச்சர்ஸ் கான்டிராக்ட்டில் ரூ.2600 என்ற விலைக்கு விற்ற தங்கத்தை திரும்ப வாங்கவேண்டும்.
 
எந்த விலைக்கு வாங்குவது?
 
இதற்கு ஃபியூச்சர்ஸ் கான்டிராக்டுகள் அது எக்ஸ்பயரி ஆகும் நாளில், அப்போதைய ஸ்பாட் விலையில் செட்டில் பண்ணப்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
ஆக ஸ்பாட் விலையில் வாங்கியதை ஸ்பாட் விலையில் விற்று செட்டில் செய்யப்போகிறோம்.  அதே நேரம், பியூச்சர்ஸ் விலையில் விற்றதையும் (ஷாட்) எக்ஸ்பயரி தினம் அன்று, ஸ்பாட் விலையில்தான் வாங்கபோகிறோம்.
இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
 
எக்ஸ்பயரி தினம் அன்று தங்கம் ஒரு கிராம் ஸ்பாட்விலை ரூ.2500/-என்று எடுத்துக்கொள்வோம்.
இப்போது செட்டில்மென்டுக்கு வருவோம்.
 
சூழ்நிலை ஒன்று: ஸ்பாட் விலை எக்ஸ்பயரி நாள் அன்று ரூ.2500
 
ஸ்பாட் மார்கெட்டில் ரூ.2500 க்கு வாங்கியதை, எக்ஸ்பயரி நாள் அன்று ஸ்பாட் விலை ரூ.2500 என்பதால் அதே விலைக்கு விற்கிறோம்.  இதில் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.
அதே நேரம், ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில் ரூ.2600-க்கு விற்ற தங்கத்தை, எக்ஸ்பயரி நாள் அன்று, ஸ்பாட் விலையான ரூ.2500-க்கு வாங்குகிறோம்.  எனவே இங்கு லாபம் ரூ.100 - ஆகும்.  காஸ்ட் ஆஃப் கேரியான ரூ.50-ஐ கழித்தால், நிகர லாபம் ரூ.50- ஆகும்.
 
இதையே எக்ஸ்பயரி தினம் அன்று, ஸ்பாட் விலை கூடவோ அல்லது குறையவோ செய்தால் என்ன நடக்கும் என்றும் பார்ப்போம்.
 
சூழ்நிலை இரண்டு; ஸ்பாட் விலை எக்ஸ்பயரி நாள் அன்று ரூ.2600
 
இப்போது ஸ்பாட் மார்கெட்டில் ஏற்கெனவே ரூ.2500-க்கு வாங்கியதை ரூ.2600-க்கு விற்பதன் மூலம் ரூ.100- லாபம். 
ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில் ஒரு மாத கான்டிராக்டில் ரூ.2600-க்கு விற்பதை, எக்ஸ்பயரி தினத்தன்று ஸ்பாட்விலை ரூ.2600-க்கு வாங்குகிறோம்.  இதனால் இந்த வியாபாரம் எந்த லாபமும் நஷ்டமும் இல்லாமல் முடிகிறது.
 
ஸ்பாட் மார்கெட்டில் ரூ.100- லாபம், பியூச்சர்ஸ் மார்கெட்டில் எந்த லாபமும் நஷ்டமும் இல்லை.  லாபத்தில் காஸ்ட் ஆஃப் கேரியான ரூ.50 கழித்தால் நிகரமாக ரூ.50- லாபம்.
 
சூழ்நிலை மூன்று: ஸ்பாட் விலை எக்ஸ்பயரி நாள் அன்று ரூ.2400
 
ஸ்பாட் மார்கெட்டில் நாம் ரூ.2500 க்கு வாங்கியதை ரூ.2400 -க்கு விற்பதால் ரூ.100 - நஷ்டம்.
 
ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில் ரூ.2600-க்கு விற்றதை (ஷாட்) எக்ஸ்பயரி தினம் அன்று ஸ்பாட் விலையான ரூ.2400-க்கு வாங்குகிறோம்.  இதனால், இங்கு ரூ.200- லாபம் கிடைக்கிறது.
 
 
இந்த ரூ.200- லாபத்தில், ஸ்பாட் மார்கெட்டில் வந்த நஷ்டமான ரூ.100- கழித்தால் வரும் லாபம் ரூ.100- ஆகும்.  இதில் காஸ்ட் ஆஃப் கேரியான ரூ.50- கழித்தால், நிகர லாபம் ரூ.50- ஆகும்.
 
மூன்று வெவ்வேறு சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தாலும், நிகரலாபம் மாறாமல் இருப்பதை பார்த்தோம்.  எனவேதான் இதை ரிஸ்க் ஃபிரி ரிடன் என்று சொல்லுவோம்.
 
எனவே ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகள் என்பது இரண்டு வெவ்வேறு சந்தைகளுக்கு இடையே உள்ள விலைகள் காஸ்ட் ஆஃப் கேரியின் அளவைவிட அதிக வித்தியாசம் இருந்தால் வரக்கூடியது ஆகும்.
 
இதுவரை நாம் பார்த்த ஆர்பிட்ரேஜ் வாய்ப்பு என்பது, ஸ்பாட் விலையைவிட பியூச்சர்ஸ் தங்கத்தின் விலை காஸ்ட் ஆஃப் கேரி அளவைவிட அதிகமா இருந்தால் எப்படி லாபம் பண்ணலாம் என்று பார்த்தோம்.  அதைப்போலவே, ஸ்பாட் விலையைவிட, பியூச்சர்ஸ் விலை கணிசமான அளவு குறைவாக இருந்தால்,  முதலில் ஸ்பாட் மார்கெட்டில் விற்றும் அதேநேரம் விலை குறைவாக உள்ள பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியும், ஆர்பிட்ரேஜ் செய்யலாம்.
(ஸ்பாட் மார்கெட்டில் எப்படி முதலில் விற்கமுடியும், இதில் நம் கையில் ஸ்டாக் இருந்தால் விற்கலாம் அல்லது ஸ்டாக்கை கடன் வாங்கி விற்றுவிட்டு, செட்டில்மென்டின்போது வாங்கி கொடுப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.)
 
அடுத்து நாம் வழக்கமாக செய்யும் ஸ்பெகுலேஷன் பற்றி விரிவாக பார்க்கலாம்.
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ