Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிக் பில்லியன் டே

பிக் பில்லியன் டே
 
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அதிரடி விற்பனை தினமாக இன்றைய நாளை ''பிக் பில்லியன் தினம்'' என்று அறிவித்திருந்தது. இந்தியாவின் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் தனது ஆஃபர்களை அள்ளி வழங்கிய வண்ணம் இருக்கிறது. இதில் வித்தியாசமான உத்திகளை கையாண்டுள்ளது ஃப்ளிப்கார்ட் இந்த நாளில் பில்லியன் விற்பனையை அடைந்தே தீருவேன் என்ற நோக்கில் விற்று தீர்ப்பதற்காக நான்கு ஆஃபர்களை வழங்கியுள்ளது.
 
குறைந்த நேரம் மட்டுமே உள்ள ஆஃபர், குறைந்த அளவு மட்டுமே உள்ள ஆஃபர், எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விலை குறைந்த ஆஃபர், மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும் ஆஃபர் என நான்கு பெரிய ஆஃபர்களால் இணையதளவாசிகள் அனைவரையும் ஃப்ளிப்கார்ட்.காமில் கட்டி போட்டிருக்கிறது இந்த ஆஃபர் மோதல். இதில் ஒரு ரூபாய்க்கு பொருட்களை விற்று ஆச்சர்யப்படுத்தியிருந்தது ஃப்ளிப்கார்ட். அதுமட்டுமின்றி இரட்டை இலக்க விலையில் தவிர்க்க முடியாத பொருட்களை வைத்து விற்ற ஃப்ளிப்கார்ட் சற்று நேரத்தில் விற்றுத்தீர்ந்தது என கடையை மூடியது.
 
அனைத்து பொருட்களையுமே ஆஃபரில் விற்ற ஃப்ளிப்கார்ட் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தனது விற்பனை உத்திகளை மாறியமைக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு முன் 99 ரூபாய்க்கு விற்கப்பட்ட புத்தகம் ஒரு மணி நேர இடைவெளியில் 125 ரூபாய்க்கு மாறியது.இப்படி ஆஃபர்களில் அள்ளித்தருகிறதே என்றால் சில புள்ளி விவர இணையதளக்காரர்கள் தங்கள் சமுக வலைதளங்களில் இந்த பொருட்களின் விலையை கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக உயர்த்திவிட்டு பின்னர் மூன்று மாதத்திற்கு முன் உள்ள விலையை திரும்ப அதிரடி விலை குறைப்பு என்று அறிவித்துள்ளனர் என்கிறார்கள் இன்டர்நெட்வாசிகள். மேலும் இவர்கள் விலையை குறைத்து விற்பதன் மூலம் ஒரு பெரிய அளவில் பொருட்களை விற்று தனது பெயரை நிலைநட்டி கொள்ளும் நோக்கில் இதனை ஃப்ளிப்கார்ட் செய்கிறது என்கின்றனர் இன்னும் சிலர்.
 
என்னதான் கூறினாலும் இன்று காலை முதல் அனைவரையும் ஆன்லைனில் கட்டி போட்டுள்ளது ஃப்ளிப்கார்ட். இன்றைய ஃபேஸ்புக் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது இந்த பிக் பில்லியன் தினம்.இதில் வாங்கும் பொருட்களை கண்ணில் பார்த்து டிஸ்ப்ளேயில் சுழற்றி வாங்கினாலும், ட்ர்ஹொட்டு பார்த்து வாங்குவது இதைவிட 200, 300 ரூபாய் தான் அதிகமாக இருக்கும் ரிஸ்க் இல்லாமல் அதில் வாங்கி கொள்கிறேன் என்கிறார்கள் ரீடெயில் வாடிக்கையாளர்கள்.
 
இதற்கு போட்டியாக அக்டோபர் 10-16 வரை அமேசான் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் தீபாவளி பர்சேஸை விரல் நுனியில் முடித்து விடுகிறது இன்றைய இளைய தலைமுறை. ஆன்லைன் மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் நான் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளேன் என்று கூறுவதை தான் இன்று அதிகம் விரும்புகிறார்கள். இவர்கள் உள்ளவரை இது போன்ற பில்லியன் தினங்களுக்கு பஞ்சமில்லாமல் பார்த்து கொள்ளும் இந்த ஆனலைன் நிறுவனங்கள்.
 
ச.ஸ்ரீராம்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ