Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிக் பில்லியன் டே' விற்பனையில் ரெட்மி 1 எஸ்

சில வாரங்களாகவே ஃப்ளிப்கார்ட்டில் மிகவும் பரபரப்பாக விற்பனையாகி வந்த ஸ்மார்ட்போன் ஸியோமி ரெட்மி 1 எஸ். இந்த ஸ்மார்ட்போன் இன்றைய ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே ஆஃபரில் 1,50,000 போன்கள் வைக்கப்பட்டன.

இதற்கான முன்பதிவு எதுவும் கிடையாது என்பதால் இதன் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்க ஆரம்பித்ததில் வழக்கம் போல சற்று நேரத்திலேயே விற்பனை முடிவுக்கு வந்து விட்டது. மிக குறைந்த விலையில் அதிக ஃப்யூச்சர்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வர்த்தகப்படுத்தப்படுவதால் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு மவுசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


இன்று ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்பதால், இன்றைய ஆஃபரில் ரெட்மி 1 எஸ் வாங்கும் போது 5% கேஸ் பேக் ஆஃபரை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வழங்கியது இதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்கிறது. 1.50 லட்சம் ரசிகர்களை இன்று இந்த நிறுவனம் திருப்தி அடைய செய்து விட்டாலும். இன்னும் பலர் ரெட்மி 1 எஸ் ஸ்மார்ட்போனை சொந்தமாக்கிக் கொள்ள தவமாய் தவமிருக்கிறார்கள். ஆனால், அடுத்த விற்பனை அக்டோபர் 14 என்பதால், அதுவரை காத்திருக்க வேண்டும் என்பதே இவர்களின் தற்போதைய கவலையாக இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close