Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்டோபர் 16 முதல் பிஎஃப் நிரந்தர எண்

 

பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர்  16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 16 இலக்கம் கொண்ட நிரந்தர எண் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவங்கி வைக்க உள்ளர்.
பி.எஃப் அமைப்பு சுமார் 5 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ளது. அனைவருக்கும் 16 இலக்க நிரந்தர எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின்  கோர் பேங்கிங் எண், ஐஎஃப்எஸ்சி கோட், வங்கி கிளை விவரம் ஆகியவற்றை கேட்டுள்ளது. 
இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும்.  
ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.  
2014-15ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 4,30,000 நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் தகவல்களை பதிவு செய்துள்ளது. மேலும் 2 கோடி உறுப்பினர்களிடம் இருந்து வங்கி கணக்கு விவரங்களையும், 1 கோடி உறுப்பினர்களிடம் பான் கார்டு மற்றும் ஆதார் எண் விவரமும் இந்த நிரந்தர பிஎஃப் எண்ணுக்காக பெற்றப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP