Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிக் பில்லியன் டே! சமூக வலைதளங்களில் என்ன ரீயாக்‌ஷன்!

 பிக் பில்லியன் டே

 
சமூக வலைதளங்களில் என்ன ரீயாக்‌ஷன்!
 
இன்று இந்தியாவில் ''பிக் பில்லியன் டே'' என்று உச்சரிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு வைரலாகி இருந்தது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே. இன்று ஒரு பில்லியன் அளவிற்கு பொருட்களை விற்க போவதாக அறிவித்து களமிறங்கிய ஃப்ளிப்கார்ட் ஒரு ரூபாய்க்கு பென்டிரைவ் விற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 
இப்படிப்பட்ட விற்பனை ஃப்ளிப்கார்ட் பற்றிய  செய்திகளை இன்றைய ஃபேஸ்புக், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பெற செய்தாலும் இன்று இணையதளத்தில் பொருட்களை வாங்க சென்றவர்களை கடுப்பேற்றியும் உள்ளது. இன்றைக்கு விற்பனைக்கு வந்த சில பொருட்கள் சற்று நேரத்தில் ''அவுட் ஆஃப் ஸ்டாக்'' என்ற விற்றுத்தீர்ந்ததாக அறிவிப்பு கணினி திரையில் தோன்ற சமூக வலைதளங்களில் ஃப்ளிப்கார்ட்டை பற்றிஅய் விமர்சனங்களை முன் வைக்க துவங்கினர்.
 
இது ப்ளிப்கார்ட் அல்ல, ஃபெயில்கார்ட், அதிகமான நபர்கள் இணையதளத்தை முடக்கியதால் இணையதளம் செயலிழந்தது என்ற செய்தியை ஃப்ளிப்கார்ட் பெயில் என்றும் முன் வைத்தனர்.  பெரும்பாலான மக்கள் முன்வைத்த கருத்தே ஸ்டாக் இல்லை என்ற அறிக்கையை தான். சிலர் கிண்டலாக 
 
''இன்று அதிகம் வாங்கப்பட்ட பொருள் சர்வர் இயங்கவில்லை''
 
''ப்ளிப்கார்ட்டை மிஞ்சியது ஐஆர்சிடிசி இணையதளம்''
 
''ஃப்ளிப்கார்ட் இணையதளம் நம்ம ஊர் சந்தையின் டிஜிட்டல் வடிவம்''
 
''நான் விலையில்லாமல் பொருளை வாங்கியுள்ளேன். அதன் பெயர் அவுட் ஆஃப் ஸ்டாக்''
 
இப்படி ஒரு சிலர் கிண்டலடிக்க. இன்னும் சில சீரியஸ் விமர்சகர்கள் இது சாதாரண விலை தான் மூன்று மாதங்களுக்கு முன்பு விலையை ஏற்றிவிட்டு இன்று தங்களை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொள்ள ஆஃபர் விலை என்று கூறி முன்றேஉ மாத சராசரி விலையிலேயே விற்றுள்ளனர் என்று பழைய விலையை ஒப்பிட்டு புள்ளிவிவரம் தந்துள்ளனர் இணையதள விமர்சகர்கள்.
 
இன்று சினிமா முதல் சில்லறை வணிகம் வரை அனைத்திற்குமே ஆன்லைனில் விமர்சனங்கள் உடனடியாக் கிடைப்பதால் மக்களின் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனாலும் எவ்வலவு சொன்னாலும் ஆசையில் பணத்தை செலவழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிரார்கள் என்றும் சில கூறுகின்றனர்.இறுதியில் இன்ரைய நாளின் வைரல் ஆகியுள்ளது ''பிக் பில்லியன் டே''
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ