Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு பில்லியனை தொட்டது ஃப்ளிப்கார்ட்: 600 கோடி ரூபாய் விற்பனை

இந்தியாவின் முன்னனி இ-காமர்ஸ் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் இன்று காலை 8 மணிக்கு பிக் பில்லியன் தின விற்பனையை துவங்கியது. இன்று அவர்களது இணையதளம் திணறும் அளவிற்கு பொருட்களை விற்று தீர்த்தது ஃப்ளிப்கார்ட்.
 
இன்று மாலை 6 மணி நிலவரப்படி 10 மணி நேரத்தில் ஃப்ளிப்கார்ட் ''பிக் பில்லியன்'' அளவான 100 கோடி முறை வாடிக்கையாளர்கள் பார்வையிட்ட இணையதளம் என்ற பெருமையை எட்டியதுடன் மட்டுமின்றி விற்பனையிலும் அதிக வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
 
இன்று மட்டும் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரே நாளில் அதிக வருவாய் பெற்ற இ-காமர்ஸ் நிறுவனம் என்ற பெயரை பெற்றது ஃப்ளிப்கார்ட்.
 
இந்த தகவல்களை கேட்ட சிலர் வருவாயே 600 கோடி என்றால் ஆஃபர் சேர்த்தால் எவ்வலவு ரூபாய் இருக்கும் என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பிக் பில்லியன் டேயில் பில்லியன் இலக்கை எட்டியது ஃப்ளிப்கார்ட்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close