Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணவீக்கத்தை தாண்டி சம்பள உயர்வு!

 

2015 இந்தியாவில் 10.8% சம்பள உயர்வு இருக்கும் என சமீபத்திய ஒரு சர்வே குறிப்பிட்டுள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக சம்பள உயர்வு வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.  குறிப்பாக பாகிஸ்தான், வங்காளம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் சராசரியாக 11 சதவிகிதம்வரை சம்பள உயர்வு இருக்கும் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. 
 
இந்த நாடுகளுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா உள்ளது. இந்த ஆய்வுக்காக ஆசிய பசிபிக் பகுதியைச் சேர்ந்த 20 நாடுகளிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து பெறபட்ட தகவல்கள் அடிப்படையில் இந்த  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஊதிய முடக்கமும் செய்கின்றன என்றும் இந்த ஆய்வு சொல்கிறது. 
 
முக்கியமாக பணவீக்கத்தின் அடிப்படையில், அதாவது பணவீக்கத்துக்கு பிறகு சீனாவில் 5.2 சதவிகிதம் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் (4.5 சதவீதம்), வங்காளம் (4.3 சதவீதம்), வியட்நாம் (4.1 சதவீதமாக) மற்றும் இலங்கை 3.8 பணவீக்கம் உள்ளது. ஆனால் இந்தியாவில் 3.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள  போதுமான சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பணவீக்க அழுத்தங்களை தாண்டி செலவுகள் மேலாண்மை செய்ய , செலவுகளை சமன்படுத்த நிறுவனங்கள் தயாராக வேண்டும் எனவும் அந்த ஆய்வு சொல்கிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ