Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி புகார்: எம்ஆர்டிடி சொத்துகள் முடக்கம்..!

 மோசடி புகார்: எம்ஆர்டிடி  சொத்துகள் முடக்கம்..!

 
மதுரையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் எம்ஆர்டிடி என்கிற நிறுவனம் குறித்து செப்டம்பர் 07 நாணயம் விகடன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாக எழுதினோம். 
 

 

எம்ஆர்டிடி நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணத்தை திரட்டுவதில் நமக்கு பல சந்தேகங்கள் இருந்ததால் செபி, ஆர்பிஐ, மதுரை பொருளாதார குற்றபிரிவு, இந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் என பல தரப்பிலும் தகவல்களை சேகரித்தும், அந்த நிறுவனத்திடம் பெற்ற விளக்கத்தையும், அந்த விளக்கத்தின் அடிப்படையில் முன்னணி ஆடிட்டர்கள், நிறுவனச் செயலர்கள் சொன்ன கருத்துக்களை  எழுதியிருந்தோம். 
 
 
பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட, பங்குகளை வெளியிட ஆர்பிஐ, செபி அனுமதி இல்லாமல் இயங்குவதும், அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் உள்ள குளறுபடிகள், பொதுமக்களுக்கு கொடுக்கும் குழப்பமான வாக்குறுதிகள் இவற்றின் அடிப்படையில் அந்த நிறுவனத்தை நம்பி பொதுமக்கள் பணம் கட்டுவது ரிஸ்கானது என்பதை தெளிவாக விளக்கியிருந்தோம்.   
 
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில் எம்ஆர்டிடி இயக்குநர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நிறுவனம் கையாண்டுவரும் வங்கிக் கணக்குகளையும்,  சொத்துகளையும் முடக்கிவைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
 
 
இது குறித்த விவரங்களை நாணயம் விகடன் செப்டம்பர் 7ம் தேதியிட்ட புத்தகத்தில் விரிவான கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையை படிக்க கீழே உள்ள இணையதள முகவரியை க்ளிக் செய்க: http://nanayam.vikatan.com/index.php?aid=8270
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP