Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோஸிஸ் - இரண்டாம் காலாண்டு முடிவு!


இன்று இன்ஃபோஸிஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 7-9 சதவிகிதமாக இருந்து வருகிறது. இன்று காலை 11.24 மணி அளவில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கானது  3853.00 (5.72% அதிகரித்து) வர்த்தகமானது. அதே சமயத்தில் மற்ற ஐடி நிறுவனங்களின் பங்குகளும் அதிகரித்தே வர்த்தகமாகின.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 13,342 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலண்டில் 12,770 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல இந்த நிறுவனத்தின் மொத்த லாபம் 4,724 கோடி ரூபாயிலிருந்து 5,141 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 3,211 கோடி ரூபாயாக இருந்தது. இது இரண்டாவது காலாண்டில் 3,483 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல நிறுவனத்தின் நிகர லாபமும் 2,886 கோடி ரூபாயிலிருந்து 3,096 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் தர ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

காலாண்டு முடிவு வெளியீட்டிற்கு பிறகு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் சிஇஓ சிக்கா, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எங்களின் வணிக வளர்ச்சியானது மறுமலர்ச்சியுடன் காணப்படும் என்றும், எங்களின் நீண்டகால வளர்ச்சி நோக்கமானது 15.-18 சதவிகிதம். அதே போல தேய்மானம் மற்றும் வரிக்கு முந்தைய வருமானத்திலும் 25-38 சதவிகித வளர்ச்சி என்பதே எங்களின் குறிக்கோள்" என்று சொல்லி இருக்கிறார்.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ