Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்கள் தொழில்நுட்பங்களை அதிகமாக அப்டேட் செய்ய வேண்டும் - சத்யா நாதெள்ளா

 பெண்கள் தொழில்நுட்பங்களை அப்டேட் செய்துக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இன்று உள்ளது. அதை பெண்கள் தேடி செல்ல வேண்டும்'' என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஒ சத்யா நாதெள்ளா கூறியுள்ளார்.


''ஆண், பெண் இடையே சம்பள இடைவெளி என்பது என்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், கடந்த வருடம் 78 சதவிகித பெண்கள், ஆண்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார்கள் என அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் யுனிவர்சிட்டி வுமன் சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 

என்றாலும், மைக்ரோ சஃப்ட் நிறுவனம், பிற தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை போலவே செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 1லட்சம் பேர். இதில் 29 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பெண்கள் என சமீபத்தில் அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ