Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் ப்ரீஆர்டர் இந்தியாவில் துவங்கியது.

 இந்தியாவில் முதல் முறையாக ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்களின் நள்ளிரவு ப்ரீஆர்டர் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியது. வாடிக்கையாளர்கள் இந்த போனை முன்கூட்டியே   ஆர்டர் செய்து கொள்ளும் வசதியை வைத்துள்ளது.  கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இ காமர்ஸ் வெப்சைட்டுகள் மற்றும் செல்போன் விற்பனை கடை, ஆப்பிள் ஸ்டோர் மூலமாக சுமார் 5 ஆயிரம் போன்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும். 


மொபைல் ஸ்டோர், யுனிவர்செல், சங்கிதா மொபைல் ,ஆப்பிள் ஸ்டோர் ஆகிய இடங்களில் ப்ரீ ஆர்டர் செய்ய முடியும். வருகிற அக்டோபர் 17ம் தேதி இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் விற்பனைக்கு வருகிறது. 128 ஜிபி ஐபோன் 6ன் விலை 71,500 ரூபாய் ஆகும். இந்த போன்  ப்ரீஆர்டரில் அதிகமாக புக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய 5எஸ் போன் இந்தியாவில் மொத்தமாக 2 ஆயிரம் போன்கள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ