Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் சர்வே முடிவுகள்!

 நாணயம் சர்வே முடிவுகள்!

 நாணயம் விகடன் ஆன்லைன் ஆஃபர்கள் குறித்த மக்களின் கருத்து என்ன என்று கடந்த வாரம் ஒரு சர்வேயினை இணையதளத்தில் நடத்தியது. இதில் இணையதளம் மூலமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்த 1400க்கும் அதிகமான மக்கள் ஆன்லைன் ஆஃபர்கள் பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர்.

ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களை நகரத்தில் உள்ளவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், 11 சதவிகித மக்கள் கிராமத்தில் இருந்தும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குகிரோம் என்று கூறியிருந்தது இந்தியாவில் இணையதளம் கிராமங்களை சென்றடைந்துள்ளதை காட்டுகிறது.

அதுமட்டுமின்றி இணையதள பர்சேஸில் அதிகம் விரும்பப்படுவது எலெக்ட்ரானிக் சாதனங்களும்,புத்தங்களும்  தான். இந்த வர்த்த்கம் ரீடெயில் கடைகளை பாதிக்கும் என்று 43% பேரும், ஓரளவிற்கு தான் பாதிக்கும் என்று 49% பேரும், 8% பேர் இவை எந்த விதத்திலும் ஆன்லைன் நிறுவனங்களை பாதிக்காது என்று கூறியுள்ளனர்.

சர்வே முடிவுகள்:

 

 

ச.ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ