Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 13

                                   கமாடிட்டி வியாபாரம் 13


தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

கமாடிட்டி வியாபாரம்:

 
கமாடிட்டியில் நாம் பொதுவாக செய்யும் ஸ்பெகுலேஷன் பற்றி இனி, விரிவாக பார்க்கலாம்.
ஸ்பெகுலேஷன் என்பது, குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் செய்யும் வியாபாரம் ஆகும்.  நாம் சந்தையில் வியாபாரம் செய்ய நினைக்கும் கமாடிட்டி ஆகட்டும் அல்லது பங்குகள் ஆகட்டும், வாங்கியவுடன் அதை உடனடியாக விற்று லாபம் பார்க்க  செயல்பாடுகள ஆகும்.
 
குறுகிய காலம் என்று சொல்லும்போது, வியாபார ரீதியாக பொருளை வாங்கிவிட்டு சில தினங்களிலோ அல்லது அதே நாளிலோ விற்று வியாபாரம் செய்வதை சொல்லலாம்.
 
இந்த குறுகியகால வியாபாரத்தை கால அளவைக் கொண்டு இரண்டாக பிரிக்கலாம்.  ஒன்று தினசரி வர்தகம் மற்றது ஸ்விங் வர்தகம்.
 
தினசரி வர்தககம் என்பது, வியாபார ரீதியாக ஒரு பொருளையோ அல்லது பங்கையோ அன்றே வாங்கி, சந்தை முடிவதற்க்கு முன்பாக அன்றே விற்பது ஆகும்.
 
ஸ்விங்க வியாபாரம் என்பது, ஒரு பொருளையோ அல்லது பங்கையோ ஒரு நாள் வாங்கிவிட்டு, அதை சில தினங்கள் முதல் சில வாரங்கள் வரை வைத்திருந்து வியாபாரம் செய்யும் முறை ஆகும்.  இங்கு சில வாரங்கள் என்பதை நான்கு வாரங்கள் வரை (ஒரு மாதம்) என்றும் எடுத்துக்கொள்ளலாம்.  இந்த ஸ்விங் வியாபாரத்தை இன்னும் ஒரு வகையிலும் அழைப்பர்.  அதாவது, பொஷிஷன் டிரேடிங் என்றும் அழைப்பர்.
இப்போது நமக்கு மேலே கூறிய இரண்டு வகை வியாபார முறைகள் நன்கு புரிந்திருக்கும்.  இனி இந்த வகை வியாபாரத்தில், நாம் நம் நிலைப்பாட்டை பொருத்து இரண்டு வகையான வியாபாரங்களை செய்யலாம்.
வியாபார முறை1: (ஏறும் என்று நினைப்பது - லாங்)
 
நாம் ஒரு பொருளோ அல்லது பங்கோ ஏறும் என்று நினைத்து முதலில் வாங்கி பின்பு விற்பது ஆகும்.
எடுத்துக்காட்டாக சொல்வதாக இருந்தால், சில்வரை ரூ.39400/- என்ற விலைக்கு வாங்கி ரூ. 39600/- என்ற விலைக்கு விற்பதாக எடுத்துக்கொள்ளலாம்.  இதில் லாபமாக ரூ.200/- கிடைக்கிறது.  இது தினசரி வர்தகத்திற்கு எடுத்துக்காட்டு.  இதுவே சில்வரை ரூ.39400/-க்கு வாங்கிவிட்டு சில தினங்கள் வைத்திருந்து ரூ.41000/- என்ற விலைக்கு விற்றால், இதைத்தான் ஸ்விங் டிரேடிங் என்று சொல்கிறோம்.  இந்த வியாபாரத்தில் ரூ.1600/- லாபமாக கிடைக்கிறது. 
 
இவ்வாறு முதலில் வாங்கி பின்பு விற்க்கும் முறையை லாங் என்று அழைப்போம். 
வியாபாரமுறை 2; (இறங்கும் என்று நினைப்பது - ஷாட்)
ஒரு பொருளையோ அல்லது பங்கையோ, தற்போதைய விலையில் இருந்து இறங்கும் என்ற நினைத்து முதலில் விற்றுவிட்டு பின்பு வாங்குவதே ஆகும். 
 
எடுத்துக்காட்டாக, சில்வர் தற்போது ரூ.42000/- என்ற விலையில் வியாபாரம் ஆவதாக எடுத்துக்கொள்ளலாம்.  இந்த விலையில் இருந்து இனி இறங்கத்தான் வாய்ப்புண்டு என்று நாம் நினைக்கும்போது, முதலில் ரூ.42000/- என்ற விலையில் விற்கிறோம்.  பின் விலை இறங்கி 41800/-க்கு வரும்போது வாங்குகிறோம்.  இந்த வியாபாரமுறையைத்தான் ஷாட் என்று அழைக்கிறோம்.  இதிலும் நமக்கு ரூ.200/- லாபமாக கிடைக்கிறது. இதுவே ஸ்விங் டிரேடர்கள் ரூ.42000/-க்கு விற்றுவிட்டு, சில தினங்கள் பொருத்து ரூ.39800/- என்ற் விலைக்கு வாங்கினார்களேயானால், இவர்களுக்கு ரூ 2200/- லாபமாக கிடைக்கிறது.
 
முந்தைய வியாபார முறையான லாங்குக்கும் ஷாட்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஏறும் என்று நினைக்கும்போது முதலில் வாங்கி, பின் விற்கிறோம். இது லாங் ஆகும்.
இறங்கும் என்று நினைக்கும்போது முதலில் விற்றுவிட்டு பின் வாங்குகிறோம்.  இது ஷாட் ஆகும்.
இந்த இரண்டிலுமே ஒரு வாங்குதல் மற்றும் விற்றல் இருக்கிது.  ஒரு வாங்குதல் மற்றும் ஒரு விற்றல் இருந்தால்தான் ஒரு வியாபாரம் முழுமை பெறும்.  மற்றபடி ஒரு ஸ்பெகுலேட்டராக நாம் இரண்டு வழிமுறைகளையுமே சமமாக பாவித்து, இரண்டு வாய்ப்புகளையுமே வலிமையாக உபயோகம் செய்யவேண்டும்.
 
இதுவரைக்கும் லாபம் பற்றியே பேசினோமே, இதில் நஷ்டம் வரவே வராதா?
இல்லீங்க, லாபம் வரும் நினைத்து நீங்கள் ஈடுபம் வியாபாரத்தில், லாபம் வருவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதை போலவே, நஷ்டம் வருவதற்க்கான சாத்தியகூறுகளும் உண்டு.
எப்படி?
நாம் லாங் போகும்போது, சில்வரை ரூ.39600/-க்கு வாங்கியபிறகு, அது இறங்க ஆரம்பித்தால், அதாவது, ரூ39400 என்ற இறங்க ஆரம்பித்தால், நமக்கு ரூ.200/- நஷ்டம் வருகிறது.  இதுவே விலை இன்னும் இறங்கி ரூ.39200/- என்று இறங்கினால், ரூ.400/- நஷ்டமாக வருகிறது.
நாம் ஷாட் போகும்போது, சில்வரை ரூ.42000 க்கு விற்ற பிறகு, விலை கூட ஆரம்பித்தால், அதாவது விலை 42200/- என்று கூடினால், நமக்கு ரூ.200/- நட்டம் வருகிறது.  மேலும் விலை ரூ.42400/ என்று கூடினால், நமக்கு ரூ.400/- நட்டம் வருகிறது.
 
இந்த நட்டத்தை தடுக்கும் நோக்கத்தில்,  எந்த அளவு நஷ்டத்தை நாம் தாக்குபிடிக்கமுடியும் என்று நிர்ணயிப்பதைதான் ஸ்டாப்லாஸ் என்று சொல்கிறோம். 
எல்லா பாமர மக்களும் கமாடிட்டி சந்தையில் நுழையும்போது, அது என்ன என்று தெரியாமல், நுழைவதே அதிகம்.  என்னமோ தெரியலிங்க, நாங்க பேங்ல சும்மா கிடக்கிற பணத்தை கோல்ட், சில்வர் இதில டிரேட் பண்ணா நல்லா லாபம் கிடைக்கும்னு சொன்னாங்க.  ஆனா, எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்க.  ஆனா, எப்படியாவது பணம் சம்பாதிக்கனுங்க.
அதிலும், சில நாட்கள் யாரோ கொடுக்கும் டிப்ஸ்சை வைத்து சிலநாட்கள் லாபம், பல நாட்கள் நஷ்டம் என்று பணத்தை இழந்தபிறகே...
 
ஓஹோ, இது பியூச்சர்ஸ் வியாபாரமா?
அதனாலதான் லாட், லாட்டாக வாங்க சொல்றாங்களா?
 
ஆனா,  குறைவா பணத்தை கட்டி நிறைய சம்பாதிக்கலாம் சொல்லித்தானே கூப்பிட்டாங்க!
நான் சொல்லிகுடுக்கிறபடி டிரேட் பண்ணுங்க லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்?
 
நீங்க, ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம்.  என்னோட சாப்ட்வேரை வாங்கி உபயோகம் பண்ணும், அப்படி பணத்தை அள்ளலாம்.
நாங்க ஃபிரியா ஒரு வாரம் டிப்ஸ் தரோம், வாங்கி உபயோகம் பண்ணுங்க, அப்புறம் பணம் கட்டி வாங்குங்க.
நான் ஒரு ஜாக்பாட் கால் கொடுக்கிறேன், நீங்க சொத்துவித்துகூட அதில கட்டுங்க, பெரிய லாபம் கிடைக்கும்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், எங்க டிப்ஸ்ஸ நீங்க வாங்குங்க, லாபம் வந்தா உங்களுக்கு, நஷ்டம் வந்தா அதை பாதியா பிரிசுக்கலாம்.
 
இதைத்தாண்டி இன்னும் இனிப்பான வரவேற்புகளும் உண்டு.  அதாவது, உங்க பணத்தை எங்ககிட்ட கொடுத்திடுங்க.   நீங்க ஒண்ணும் பண்ணவேண்டாம்.  நாங்களே வாங்கி, நாங்களே விற்போம்.  மாசம் உங்களுக்கு 10% லாபம் கொடுக்கிறோம்.
 
அப்படின்னா, நீங்க எங்கிட்ட ஒரு பத்து லட்சம் ரூபாய் கட்டுங்க.  மாசம் ஒரு லட்சம் ரூபாய் உங்களுக்கு லாபம் கொடுக்கிறோம்.
 
மேலே சொன்ன விஷயங்கள் ஒரு வட்டம் மாதிரி.
முதல்ல எனக்கு ஒண்ணுமே தெரியாது அப்படின்னு நிலையில் ஆரம்பித்து, படிப்படியா டிப்ஸ் எல்லாத்தையும் ஒரு ரவுண்ட் அடிச்சிடுவோம்.   அப்புறமா நம்ம என்னா பண்ணாலும் சரிபட்டு வரலீங்கோ.  அதான் பணத்தை இன்னொருத்தர் கிட்ட கொடுத்து அவரை பண்ண சொல்லி இருக்கேன்.
இதிலேயே இன்னும் ஒரு உச்சம் இருக்கிறது.  நான் அஞ்சு வருஷமா டிரேட் பண்றங்க.  எனக்கு எல்லாம் தெரியும்.  
 
தினம் எவ்வளவு லாபம் பண்றீங்க?
லாபமா?  ஆரம்பிச்ச காலத்தில இருந்து இப்பவரைக்கும் நஷ்டம்தாங்க.
அப்புறம் எல்லாம் தெரியும் சொல்லிறீங்க
 
அட.... எல்லா நஷ்டத்தையும் பார்த்ததாலதான், எல்லாம் தெரியும் சொல்றேன்.
அப்ப இவ்வளோ நஷ்டம் வந்துச்சீன்னு சொல்றீங்களே, டிரேட் பண்றத நிறுத்திட்டீங்களா?
அப்படியெல்லாம் இல்லீங்க.   இன்னும் அப்படியே பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்.
இப்ப நாம மூணாவது வியாபார முறையான ஸ்பெகுலேஷனுக்கு வந்துட்டோம். மேல நீங்க படிச்சது எல்லாம், இப்ப நடைமுறையில் இருக்கிற நெஜம்.
 
இதுவரைக்கும் நாம் படித்த வியாபார முறைகளான ஹெட்ஜிங், ஆர்பிட்ரேஜ் போன்றவரை சிறப்பு வியாபார முறைகள் ஆகும்.  இதை செய்வதற்க்கு அனுபவமும், அந்த மாதிரியான சூழலும், வாய்ப்பும் தேவை.  ஆனால், ஸ்பெகுலேஷன் என்பது யார் வேண்டுமானாலும் செய்யக்கூடியது.
அதனால்தான் நாமும் எளிதில் கவரப்படுகிறோம்.  
 
ஸ்பெகுலேஷன் என்பது உழைக்காமல், எளிதாக பணம் சம்பாதிக்கும் வழி என்பதுபோல் நமக்கும் தோன்றலாம்.  இல்லை இப்படிதான் பலரும் உங்களை சந்தைக்கு இழுக்கலாம்.
ஆனால், அது உண்மை இல்லை.
 
ஏன் என்று அடுத்தவாரம் பார்க்கலாம்.
 
 
 
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ