Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரான்ஸ் பொருளாதார மேதை ஜீன் டிரோலுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

 பிரான்ஸ் பொருளாதார மேதை ஜீன் டிரோலுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 
 
பிரான்ஸ் பொருளாதார மேதை ஜீன் டிரோலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 61 வயதான இவர் டவ்லஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ல் பேராசிரியர் ஆவார். இவர் நிறுவனங்களுக்கான போட்டியில் நெறிமுறைகளை வகுப்பதில் திறமை கொண்டவராகவும், சர்வதேச பொருளாதாரத்துறையில் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறவர்.
 
61 வயதான இவர் இந்த விருதை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அரங்கில் அறிவித்தவுடன் அளித்த பேட்டியில் ''அதிக அதிகாரமுள்ள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும்'' என்று கூறினார்
 
கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நிதி மார்க்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதினை பெற்றார்கள். இதுவ்அரை பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்களில் பிஸாரிடெஸ் தவிர அனைவரும் அமெரிக்கர்களே. தற்போது அமெரிக்கர் அல்லாத ஜீன் டிரோல் இந்த விருதை பெற்றுள்ளார்.
 
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ