Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப் நிறுவனரின் வருட சம்பளம் 61 ரூபாய்!

 வாட்ஸ்அப் நிறுவனரின் 

வருட சம்பளம் 61 ரூபாய்!
 
 
கடந்த வாரத்தின் ஹாட் நியூஸாக இருந்தது வாட்ஸ் அப் உடனடி தகவல் ஆப்ஸை சமூக வலைதளமான்ன ஃபேஸ்புக் வாங்கியது. அதனைத்தொடர்ந்து அது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.$4.59 பில்லியன் டாலர் மதிப்புள்ள 177,760,669 ஃபேஸ்புக் பங்குகள் வாட்ஸ் அப் பங்குதாரர்களுக்கு விற்கப்படும் என்றும், இதில் 45,941,775 மதிப்புள்ள பங்குகளை நிபந்தனையுடன் கூடிய பங்குகளாக வாட்ஸ் அப் ஊழியர்களே வைத்து கொள்ளலாம் என்றும் ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இதில் முக்கியமான விஷயமாக தற்போது ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் பெற்றுவரும் ஆண்டு வருமானமான 1 டாலரை(சுமார் 61 ரூபாய்) இந்த மாறுதலுக்கு பிறகு வாட்ஸ் அப் நிறுவனத்திஒன் நிறுவனர்களில் ஒருவரான ஜான் கோமும் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த இருவருக்குமே பங்குகளிலிருந்து பெறும் பணத்தை தவிர வருடத்திற்கு வெறும் ஒரு டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 61 ரூபாயை தான் சம்பளமாக பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஃபேஸ்புக் வாட்ஸ் அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கு வாங்கியட்து குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ