Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் இ-காமர்ஸ் மோசடி!

 தொடரும் இ-காமர்ஸ் மோசடி!

 
சமீபகாலமாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஃப்ளிப்கார்ட்டின் ''பிக் பில்லியன் டே''  மற்றும் மற்ற நிறுவனங்களின் ஆஃபர்கள் என இந்தியா முழுவதையும் கணினி முன் கட்டி வைத்திருந்தன இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள். ஆன்லைனில் பொருட்களை வாங்கியவர்கள் கூட அதிக தூரம் அலைய வேன்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலியே பொருட்களை வாங்குகிறோம் இதற்காக நாங்கள் அதிக தொகையும் செலவழிக்கவிலை. ரீடெயில் கடைகளைவிட குறைந்த விலையிலேயே பொருட்களை வாங்குகிறோம் என்றனர். இந்நிலையில் ஆன்லைன் நிறுவனங்களில் நடந்துள்ள மோசடிகள் வெளியாக துவங்கியுள்ளன.
 
பொருட்கள் வந்து சேர்வதற்கு முன்னதாகவே  ஆன்லைன் நிறுவனங்களின் மோசடிகள் அரங்கேற தொடங்கி இருப்பது அதிச்சியான விஷயமாக மாறியுள்ளது. இதில் முதலில் சிக்கியது ஃப்ளிப்கார்ட் இந்த நிறுவனம் வைத்திருக்கும் பொருளின் மாடல் படத்தில் உள்ள காலணியிலேயே 194 ரூபாய் போட்டுள்ளது ஆனால் அதனை 399 ரூபாய் என்று கூறி ஆஃபர் போக 198 ரூபாய் என்று கூறியிருந்தது அந்த நிறுவனத்தின் கவனக்குறைவால் வெளிச்சத்துக்கு வந்தது.
 
அடுத்தது ஷாப் க்ளூஸ் நிறுவனத்தில் வாங்கப்பட்ட முன்னனி நிறுவனம் ஒன்றின் சன் கிளாஸ் இதனை ஆர்டர் செய்யும் போது வாயை பிளக்கும் அளவிற்கு ஆஃபர் விலையில் அறிவித்திருந்தது 15000 ரூபாய் கண்ணடி 300 ரூபாய் என்று அனைவரும் ஆசையில் விழுந்தனர். இதனை வாய்ங்கிய சென்னையை சேர்ந்த ஒருவர் கண்ணடி வந்தது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் காரணம் கண்ணாடியில் கீறல்கள் இருந்துள்ளது, மேலும் பழைய கண்ணாடி போன்ற உணர்வும் இருந்துள்ளது. சரி கண்ணாடி ஒரிஜினல் தானே என்பவருக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது. அதுவும் ஏதோ ஒரு போலி நிறுவனம் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
அடுத்ததாக சில பெரிய நிறுவனங்களை சமாளிக்க களமிரங்கும் சிறிய இ-காமர்ஸ் நிறுவனங்களும் மூன்று மாதத்திற்கு முன்பு இருந்து படிப்படியாக விலையை உயர்த்தி கடைசியாக ஆஃபர் என்று கூறி மூன்று மாதத்திற்கு முன்பு உள்ள விலைக்கு விற்கின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. இதனால் பொருட்களை ஆர்டர் செய்து விட்டோமே வேறு வழியில்லை என்று கூறி வாங்கிவிட்டு இனி இந்த ஆன்லை பக்கமே செல்ல மாட்டேன் என்பவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் இதற்கு ஆனலைன் நிறுவனங்கள் காரணமல்ல அவர்களுக்கு பொருட்களை விற்பவர்கள் தான் என்கிறார்கள் சிலர்.
 
எப்படி இருந்தாலும் ரீடெயில் கடைகளுக்கு சென்று ஆடைகளை பார்த்து வாங்கும் அளவிற்கு இருக்காது என்ற வாடிக்கையாளர்களும் உள்ளனர். நாணயம் விகடன் சமீபத்தில் நடத்திய ஆனலைன் ஆஃபர்கள் குறித்த சர்வேயிலும் கூட 49% பேர் ரீட்டெயில் கடைகளை பரிந்துரைத்துள்ளனர். அதைவிட இவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் வாக்களித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ