Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஎல்எஃப் பங்கின் விலை 25 % சரிவு.

 டிஎல்எஃப் நிறுவனத்தின் பங்கு விலை இன்று (14.10.2014) ஒரே நாளில் சுமார் 25 சதவிகிதம் சரிந்துள்ளது. அதாவது நேற்று செபி அமைப்பானது இந்த நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் கேபி சிங், துணைத் தலைவர் ராஜீவ் சிங் உள்ளிட்ட 6 பேரை மூன்று ஆண்டுகளுக்கு  பங்கு வர்த்தகத்தில் ஈடுபட  தடை விதித்துள்ளது. இந்தத் தண்டனை கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ வந்த போது மோசடியாக பங்கு ஒதுக்கீட்டை மேற்கொண்டது என்பதற்காக வழங்கப்பட்டிருக்கிறது. 

இதை அடுத்து இந்த நிறுவனப் பங்கின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய வர்த்தகம் ஆரம்பிக்கும் போது 132.05 ரூபாயாக இருந்த பங்கின் விலை மதியம் ஒரு மணிக்கு ரூ. 108.50  ஆக குறைந்து வர்த்தகம் ஆனது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ