Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளிப்கார்ட்டுக்கு 1000 கோடி அபராதமா?

இந்தியாவில் உள்ள முன்னனி ஆன்லைன் வர்த்தக நிறுவனமமான பிளிப்கார்ட்- க்கு மத்திய அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த  6 ஆம் தேதி, பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகைகளை அறிவித்து  `பிக் பில்லியன் டே`  என்ற விற்பனையை நடத்தியது. இதில் சுமார் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாயின.  
 
இதனையடுத்து இந்திய வர்த்தக நிறுவனங்கள் சார்பில், மத்திய அரசிடம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் இந்திய வணிக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் வேலை இழப்புக்கு ஆளாக நேரிடும் என்றும்   புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, பிளிப்கார்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அரசு கவனித்து வருவதாகவும், புகார்களின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் மத்திய அமலாக்க நிறுவனம் இந்த ஒரு நாள் விற்பனை குறித்து கேள்வி எழுப்பி, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் ரூ.1000 கோடி அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP