Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஎஃப்ஏ கேலக்ஸி கருத்தரங்கம்

ஐஎஃப்ஏ கேலக்ஸி கருத்தரங்கம்
 
ஐந்தாவது ஐஎஃப்ஏ கேலக்ஸி {IFA (Independent Financial Advisors) GALAXY} கருத்தரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் அதிக எண்ணிக்கையில் தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். 
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து, அதன் தேவை குறித்தும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் விவாதித்தார்கள். நிதி ஆலோசனை குறித்து நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி பேசும் போது தனிநபரின் எதிர்கால தேவைகள் குறித்த முதலீட்டை பற்றி புரியவைத்தார். இன்னும் பல நிதி ஆலோசகர்கள் அவரவர்களின் கருத்துக்களை இந்தக் கருத்தரங்கத்தில் பதிவு செய்தார்கள். 
 
ஐஎஃப்ஏ கேலக்ஸி அமைப்பின் தலைவர் ஏ.கே.நாராயணன், "இது போன்ற கருத்தரங்குகள் நிதி ஆலோகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்ஷுரன்ஸ் ஏஜென்ட்கள் போன்றவர்களின் அறிவை மேம்படுத்துவதாக அமைகின்றன. இந்தக் கருத்தரங்க கூட்டத்துக்கு சிறு நகரங்களில் இருந்து கூட நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்த கருத்தரங்கத்தின் மூலம் நிபுணர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களை சேர்ந்தவர்களின் தொடர்புகளும் கிடைக்கிறது. இது அவர்களின் அடுத்துக்கட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது" என்றார். 
 
இந்த அமைப்பில் 10,500-க்கும் மேற்பட்ட ஆன்லைன் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ