Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைந்தது! டீசல் ரூ.2.50 குறையலாம்!

 பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைந்தது! 

டீசல் ரூ.2.50 குறையலாம்!
 
 
கடந்த 16 மாதத்தில் இல்லாத அளவுக்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கச்சா எண்னெயின் விலை 20 சதவிகித அளவுக்கு குறைந்துள்ளதும் இந்த விலை குறைப்பிற்கு காரணமாகியுள்ளது. 
 
2010ம் ஆன்டு மத்திய அமைச்சரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி மாதம் தோறும் சிறிய அளவில் 50 பைசா என்ற அளவில் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்று ஆயில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
இதனிடையே மாநில எண்ணெய் நிறுவனங்கள் அமைப்பு கடந்த அக்டோபர் 1ம் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 54 பைசா குறைத்தது. தற்போது மேலும் லிட்டருக்கு ஒரு ரூபாயை குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. இது 14ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தது. இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் முந்தைய விலையான 70.87 ரூபாயிலிருந்து(வாட் நீங்கலாக) 1.28 ரூபாய் குறைந்து 69.59 ரூபாக்கு விற்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் டீசல் விலையிலும் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ