Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

28.5 சதவிகிதம் சரிந்தது டிஎல்எஃப் பங்கு

நேற்று முன்தினம் டிஎல்எஃப் நிறுவனர் உட்பட ஆறு பேர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விதித்த தடையை தொடர்ந்து டிஎல்எஃப் பங்குகள் நேற்று மாலை சந்தையின் முடிவில் 28.5 சதவிகிதம் குறைந்து ஒரு பங்கின் விலை 104.95 ரூபாயாக வர்த்தகமானது.
 
மேலும் திங்களன்று 26,141 கோடி ரூபாயாக இருந்த மாட்க்கெட் கேப்பிடல் 7300 கோடி ரூபாய் சரிந்து 18,702 கோடி ரூபாயாக உள்ளது. இதனால் இன்றும் டிஎல்எஃப் பங்குகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
நிஃப்டி 50 நிறுவனங்களில் டிஎல்எஃப் நிறுவனத்தின் நிலை குறித்து ஆலோசித்து வருவதாக ஐஐஎஎஸ் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு டிஎலெஃப் நிறுவனம் பங்குச்சந்தை இன்டெக்ஸில் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close