Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேட்ஜெட் ரிவியூ - கேலக்ஸி நோட் 4 பேப்லெட்!

கேட்ஜெட் ரிவியூ - கேலக்ஸி நோட் 4 பேப்லெட்! 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 4 பேப்லெட் வரும் 17ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது. இது ஏற்கெனவே வெளிவந்த சாம்சங் கேலக்ஸி  நோட் 3ஐ விடவும் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் 2.7 GHz ப்ராஸசரில் இயங்குகிறது.. இதன் இன்டர்னல் மெமெரி 32 GB யாகவும் , இணைத்துக்கொள்ளக்கூடிய எக்ஸ்டர்னல் மெமரி 128GBயாகவும் உள்ளது.
 
இந்திஒயாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் 6 மற்றும் 6+ஐ வெளியிடும் அதே தேதியில் வெளியிடுவதால் இதற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனேனில் ஆப்பிள் போனின் 32GB மாடல் இன்னமும் சந்தைக்கு வரவில்லை அதனால் இதற்கான வரவேற்பு அதிகரிக்கும் என்கின்றனர் சிலர்.
 
இதன் முக்கிய அம்சங்கள்:
 
டிஸ்ப்ளே: 5.7 இன்ச்
 
மெமரி:
இன்டர்னல்:32GB
எக்ஸ்டர்னல்:128GB
 
ப்ராஸசர்: 2.7GHz
 
ப்ளூடூத்: Bluetooth 4.0
 
வை-பை:  WiFi 802.11 
 
கேமரா: 
பின்புறம்: 16 மெகா பிக்ஸல்
முன்புறம்: 3.1 மெகாபிக்ஸல் (வைடு செல்ஃபி வசதியுடன்)
 
பேட்டரி திறன்: 3220mAh
எடை: 176 g
தடிமன்: 8.5mm
 
விலை: 58,300 ரூபாய் 
 
மேலும் 4G வசதி கொண்டதாகவும் இந்த பேப்லெட் அமைந்துள்ளது.ஆனால் இந்த பேப்லெட் குறித்த சில கருத்துக்களும் வெளியாகியுள்ளன. 64GB இன்டர்னெல் மெமரி கொண்ட ஆப்பிள் ஐ6 போன் இதே விலையில் கிடைக்கிறது இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட சாம்சங் நோட் 3ஐ ஒத்துள்ளதாகவே உள்ளது.
 
அதுமட்டுமின்றி முதலில் 50000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி நோட் 3 பின்னர் விலை குறைந்தது. அதே போல் இதுவும் விலை குறையும் என்கின்றனர் சிலர். சாதாரன செல்போனை விடவும் சற்று பெரிய மற்றும் சில வசதிகள் மட்டும் அதிகம் கொண்ட இந்த பேப்லெட். இந்தியாவில் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 4 பேப்லெட்
 

 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ