Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர்ந்தது இந்தியர்களின் சொத்து!

உலக அளவில் தனிநபர்களின் சொத்து உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் இந்தியர்களின் சொத்தும் குறிப்பிடத்தகுந்த அளவில் உயர்ந்திருப்பதாக க்ரெடிட் சூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
க்ரெடிட் சூஸ் நிறுவனம் உலக சொத்து அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. 2013 மத்திம காலத்தைத் தொடங்கி 2014 மத்திம காலம் வரையிலான 12 மாதங்களில் உலக சொத்து 8.3 சதவிகிதம் உயர்ந்து 263 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறது. 
 
உலக அளவில் தனிநபர்களின் சொத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஏறக்குறைய 3,450 டாலர்கள் உயர்ந்து, 56,000 டாலர்களாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2008&ம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடிக்குப்பின் தனிநபர்கள் சொத்து இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
 
இந்தியாவில் உள்ள தனிநபர்கள் சொத்தும் 5,760 டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இதை ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 4,650 டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
 
கடந்த 2000&ல் தனிநபரின் சொத்து 2,040 டாலர்களாக இருந்தது. 2007&ல் இது 5,100 டாலர்களாக உயர்ந்தது, 2008&ல் ஏற்பட்ட பொருளாதார விளைவால் சுமார் 25 சதவிகிதம் வரை குறைந்தது. 2010&ல் பொருளாதார ஏற்றத்தின் விளைவாக மீண்டும் 5,400 டாலராக உயர்ந்தது. இதற்குப்பின் 13 சதவிகிதம் குறைந்து, கடந்த ஆண்டில் மீண்டும் உயர்ந்திருக்கிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ