Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

250 புதிய விமானங்களை வாங்குகிறது இண்டிகோ!

இந்தியாவின் பிரபல ஏர்லைன் நிறுவனங்களில் இண்டிகோ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் விமானங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஏர்பஸ்ஸிடம் இருந்து 250 புதிய ஏ320 ரக விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 25.5 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.5 லட்சம் கோடி . ஏர்பஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்த நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா கோஸ், உலக அளவில் இந்தியா விமானத் துறையில் வளர்ச்சி பெறாத நாடாக இருந்து வருகிறது. இதனாலேயெ இந்த நாட்டிற்கு ஒரு விமானம் வருவதற்கு பல வருடங்கள் ஆகின்றன. தற்போது ஏ320 ரக விமானங்களுக்கு போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி வருகிற 2018-ஆம் ஆண்டு முதல் விமானங்கள் பெறப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ