Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
 
இன்று காலை ஏற்றத்தில் துவங்கிய பங்குச் சந்தைகள் இன்றைய நாளின் முடிவில் இறக்கத்தில் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 349.99 புள்ளிகள் சரிந்து 25,999 புள்ளிகளாக வர்த்தகமானது.தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 115.8 புள்ளிகள் சரிந்து 7748 புள்ளிகளாக முடிவடைந்தது. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.78 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 1 சட்தவிகிதம் அதிகரித்து 27,577ரூபாயாக வர்த்தகமானது.
 
இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1.33 சதவிகிதமும், நிஃப்டி 1.47 சதவிகிதமும் சரிவடைந்தது. ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் மற்றும் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததும் சந்தையின் வீழ்ச்சிக்கும் காரணமாக கூறப்படுகின்றன.
 
குறிப்பாக டிஎல்எஃப், என்.எம்.டி.சி மற்றும் ஐடிசி நிறுவன பங்குகள் அதிகரித்தும், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹிண்டால்கோ, கிராஸிம் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ