Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தடைக்கு பின் டிஎல்எஃப் பங்கு விலை உயர்வுக்கு காரணம் என்ன?

டிஎல்எஃப் நிறுவனர் கே.பி. சிங், அதன் துணைத் தலைவர் ராஜீவ் சிங் உள்ளிட்ட 6 பேர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி அமைப்பு தடைவிதித்தது.2007 ம் ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ-விற்கு வந்த போது தவறான தகவல்களை தெரிவித்தற்காக இந்த தண்டணை விதிக்கப்பட்டிருந்தது.
 
கடந்த 14ம் தேதியன்று சந்தையின் முடிவில் 28.5 சதவிகிதம் குறைந்து ஒரு பங்கின் விலை 104.95 ரூபாயாக வர்த்தகமானது. மேலும் திங்களன்று 26,141 கோடி ரூபாயாக இருந்த மார்ட்க்கெட் கேப்பிடல் 7300 கோடி ரூபாய் சரிந்து 18,702 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் டிஎல்எஃப் பங்குகளின் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்த்த நிலையில் 5 சதவிகிதம் அதிகரித்து ஒரு பங்கில் விலை 110.35 ரூபாயாக வர்த்தகமானது.
 
இதற்கு காரனம் விலை குறைவாக உள்ள பங்கை வாங்கினால் பின்னாளில் நல்ல லாபம் கானமுடியும் என்ற நோக்கில் முதலீட்டாளர்கள் வாங்குவதாக கூறப்படுகிறது. நிறுவனரின் தடை தொடர்ந்தாலும் இன்னமும் நிறுவனம் தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதால் முன்ணனி நிறுவனத்தின் பங்குகள் பழைய நிலையை அடையும் என்ற நோக்கில் பங்குகளின் விலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ