Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டாம் காலண்டில் 5.8% லாபம் டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டின் வரிக்கு பிறகான லாபம் முந்தைய காலாண்டைவிட  5.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதுவே சென்ற ஆண்டின் இதே காலாண்டைவிட  13.2 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த ஆண்டின்  முதல் காலாண்டு விற்பனை 22,111 கோடியாக இருந்தது. இது இரண்டாம் காலாண்டில் 23,816 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  மேலும் ஒரு பங்கிற்கு 5 ரூபாய் டிவிடெண்டையும் டிசிஎஸ் வழங்கியுள்ளது.

இந்த காலாண்டில் டிசிஎஸ் 20,350 பணியாளர்களை இணைத்து தனது மொத்த பணியாளர் எண்ணிக்கையை 3.13 லட்சமாக அதிகரித்துள்ளது. சிஎம்சி நிறுவனத்துடனான இணைப்பை உறுதி செய்துள்ள டிசிஎஸ் அந்த நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு 79 டிசிஎஸ் பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் இணைப்பு  நீதிமன்ற அனுமதிக்குப்பின் நடைபெறும்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP