Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்!

 இந்தியாவின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்!

 
சர்வதேச பொருளாதார வல்லுனரான அரவிந்த சுப்ரமணியன் தற்போது இந்தியாவின் தலைமை பொருளாதார அலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மோடி 100 நாட்களை நிரைவு செய்த போதே இவர் இப்பதவிக்கு வருவார் என கூறப்பட்டது.
 
விரைவில் இந்த பதவியை ஏற்பார் என்று அறிவித்துள்ளது இந்திய அரசு. இதற்கிடையில் அரவிந்த் சுப்ரமணியன் அளித்துள்ள பேட்டியில் '' முதலீடு, நாட்டின் வலர்ச்சி மற்றும் அனைவருக்கும் சமாமன பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும், இந்திய அரசுக்காக பணியாற்றுவது கெளரவமிக்க பணி என்றும் கூறியுள்ளார்.
 
இவர் புதிய பொருளாதார கொள்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பார் என்ற அடிப்படையில் அரசு முடிவெடுத்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பே நாணயம் விகடனின் 8-வது ஆண்டு சிறப்பிதழில் உலகை கலக்கிய 8 தமிழர்கள் பட்டியலில் இவரை சேர்த்து  அடையாளம் கண்டிருந்தது. 
 
அதில் ''இவர் பொருளாதாரச் செய்திகளுக்கு கருத்து சொல்பவர் அல்ல. ஆனால் இவர் சொல்வதும், எழுதுவதும் எல்லாமே பொருளாதார செய்திதான்! 52 வயதான இவரை இந்தியா இன்னும் நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியிருந்தது. 
 
தற்போது 54 தான் வயதில் தான் இவரை இந்திய அரசு பயன்படுத்தி கொண்டுள்ளது. எப்படியோ இவரை போன்ற பொருளாதார நிபுணர்கள் இந்திய பொருளாதாரத்தை சரி செய்தால் சரிதான்!!
 
அரவிந்த் சுப்ரமணியன் பற்றி நாணயம் விகடனில் வெளிவந்த சிறப்பு கட்டுரை:
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP