Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 கோடி வாடிக்கையாளர்களை தொட்டது ''லைன்'' ஆப்ஸ்!

 3 கோடி வாடிக்கையாளர்களை தொட்டது ''லைன்'' ஆப்ஸ்

 
இந்தியாவில் உடனடி தகவல் ஆப்ஸான லைன் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்தியுள்ளது. இன்றைய சூழலில் உடனடி ஆப்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் ஆப்ஸ் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது.
 
இந்த போட்டியில் லைன் ஆப்ஸ் 5 கோடி ஆப்ஸ்களை எட்டுவதை இலக்காக கொண்டு செயல்படுவதாக தெரிவித்துள்ளது.உலக அளவில் 560 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட லைன். இந்தியாவில் 3 கோடி வாடிக்கையாளர் எண்ணிக்கையை எட்டியுள்ளது. 
 
இந்த எண்ணிக்கையில் போட்டியாளரான வாட்ஸ் அப் உலக அளவில் 600 மில்லியன் வாடிக்கையாளர்களையும், இந்தியாவில் 6 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் கால் வசதியுடன் ஆரம்பிக்கப்பட்ட அப்ளிகேஷனாகும். இது 2013ல் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ