Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 14

 கமாடிட்டி வியாபாரம் 14


தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

கமாடிட்டி வியாபாரம்:

 
கமாடிட்டி சந்தையில் பணம் பண்ணுவது எளிதா அல்லது கடினாமா?
 
கமாடிட்டி சந்தையில் பணம் சம்பாதிக்க பாமர மக்கள் பின்பற்றும் வழிமுறை ஸ்பெகுலேஷன் என்று சென்ற வாரம் பார்த்தோம்.  இந்த ஸ்பெகுலேஷனை எந்தெந்த வழிமுறைகளில் பின்பற்றலாம் என்றும் பார்த்தோம்.
அவை....
ஸ்விங் டிரேடிங்
டே டரேடிங்
என்று பார்த்தோம்.  
இந்த இரண்டு வகை வியாபாரத்தையும் ஏறும் என்று நாம் நம்பும் போது லாங் போவதை பற்றியும், நாம் இறங்கும் என்று நம்பும் போது ஷாட் போவதை பற்றியும் நாம் பார்த்தோம்.
 
இனி ஸ்பெகுலேஷனை பற்றி விரிவாக பார்ப்போம்.  இதில் ஸ்விங் டிரேடிங்கை பற்றி பார்ப்போம்.  பொதுவாக ஸ்விங் டிரேடிங் என்பது, விலையானது, நகரும்போது அலைகளை போல நகரும் என்பதும், அவ்வாறு நகரும்போது அதன் ஒவ்வொரு இறக்கம் முடிந்து ஏறும்போது அதன் மீது பயணிப்பதை குறிக்கிறது.
 
இந்த ஸ்விங் டிரேடிங்கிள் நாம் வாங்கிய பிறகு சில தினங்கள் முதல் சில வாரங்கள் வரை வைத்திருந்து வியாபாரம் செய்யும்முறை என்று ஏற்கெனவே கூறி இருக்கிறேன்.  கூடவே நாம் இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.   ஆகவே லாட் அளவின் அடிப்படையில் ஒவ்வொரு ரூபாய் ஏற்றமும் அல்லது இறக்கமும் நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ முடியலாம்.  சரி இனி விலை நகர்வுக்கு வருவோம்.
ஸ்விங் நகர்வின் பகுதிகள்:
ஒரு ஸ்விங் நகர்வை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். அவை
 1. கீழிருந்து மேலே திசை திரும்பும் பகுதி
 2. ஏற்றப்பகுதி
 3. ஏற்றம் முடிந்து திசைதிரும்பும் பகுதி
 4. இறக்கப்பகுதி.
 
 1. கீழிருந்து மேலே திசை திரும்பும் பகுதி
மேலே உள்ள வரைபடத்தில் இந்த நான்கு பகுதிகளும் மிகத் தெளிவாக பாகம் குறித்து வெளியிட்டு இருக்கிறேன்.
கீழிருந்து மேலே திசைதிரும்பும்பகுதி:
முதலில் கீழிருந்து மேலே திரும்பும் பகுதியை பார்ப்போம்.  விலையானது அலைகளை போல நகரும் என்று கூறி இருந்தேன்.  அந்த அலையின் ஒரு பகுதியைதான் நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.  திசை திரும்புதல் என்பது ஒரு பொருளின் விலையோ அல்லது பங்கின் விலையோ கீழ்நோக்கி நகர்ந்து வந்துகொண்டு இருக்கும்போது, ஒரு கட்டத்தில் இறக்கம் ஒரு முடிவுக்கு வந்து மேல்நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்.  (பொதுவாக விலையானது இறங்கினால், தொடரந்து இறங்கிக்கொண்டும், ஏறினால், தொடர்ந்து ஏறிக்கொண்டும் இருக்காது என்பதை மனதில் கொள்க) இந்த எடுத்துக்காட்டில், இறங்கிக்கொண்டு இருக்கும் விலையானது, மேல்நோக்கி திரும்பும் பகுதியைத்தான் திசை திரும்பும்பகுதி என்று அழைக்கிறோம்.
 
இவ்வாறு கீழுந்து மேலே திரும்பும் பகுதியில்தான் நாம் வாங்கவேண்டிய பகுதியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
2. ஏற்றப்பகுதி:
நாம் காமாடிட்டி சந்தையிலோ அல்லது பங்குசந்தையிலோ, வாங்கியபிறகு, ஆவலோடு எதிர்பார்க்கும் பகுதி.   ஆக, கீழுந்து விலை மேலே திரும்பிய பிறகு, நாம் வாங்கிவிட்டோம்.  பொதுவாக விலையானது, இந்த நிலையில் இருந்து தொடர்ந்து மேலே செல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.  அவ்வாறு ஏறுவதாகவே வைத்துக்கொள்வோம்.  இந்த ஏற்றம்தான் நமக்கு லாபத்தை கொடுக்கும் நகர்வு.  இவ்வாறு ஏறும் போது உடனடியாக லாபத்தை எடுக்கலாமா?  இந்த கேள்விக்கு, நாம் ஸ்விங் டிரேடராக சந்தையில் இறங்கும்போது, நல்ல லாபத்தை எதிர்பார்த்தே சந்தையில் இறங்குகிறோம்.  எனவே,நாம் உடனடியாக விற்காமல், இந்த மேல்நோக்கிய நகர்வு இன்னும் எந்த அளவிற்க்கு போகுமோ அந்த அளவிற்கு நாம் காத்திருக்க தயாராக இருக்கிறோம்.  
 
3. ஏற்றம் முடிந்து கீழ்நோக்கி திசைதிரும்பும் பகுதி:
 
நாம் வாங்கிய விலையில் இருந்து பொருட்களின் விலை ஏறும்போது, நாம் காத்திருக்கும் நேரம் முடியக்கூடிய பகுதி இது.  அதாவது பங்கின் விலை அல்லது பொருட்களின் விலையானது, இந்த ஏற்றத்தின் எந்த அளவிற்க்கு ஏறுமோ அந்த அளவிற்க்கு ஏற்றம் நிகழ்துவிட்டது. தற்போதைய ஏற்ற அலையானது, ஏற்றத்தின் உச்சத்தை தொட்டுவிட்டது. இனி அந்த அலை கீழ் நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளது.  
 
எனவே இந்த திருப்பத்தில் நாம் லாபத்தை வெளியே எடுக்கவேண்டும்.  நம்மை பொருத்தவரை இந்த உச்சம்தான், இந்த சுவிங்கில் அதிகபட்சமாக நாம் பாரக்கக்கூடிய லாபம்.  ஒரு சுவிங் டிரேடராக நாம் விற்றுவிட்டு இந்த வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம்.
 
4. இறக்கப்பகுதி:
 
சந்தை யாபாரத்தில், ஒரு பொருளையோ அல்லது பங்கையோ வாங்கிய பிறகு, யாருமே விருப்ப்படாத பகுதி ஆகும்.  நாம் மூன்றாம் பகுதியை திசைதிரும்பும் பகுதி என்று குறிப்பிட்டு இருந்தோம்.  அந்த பகுதியில் லாபத்தை எடுக்கவேண்டும் என்றும் சொல்லி இருந்தோம்.  அதற்கு அடுத்த பகுதியாக இந்த இறக்கப்பகுதி நிகழ்கிறது.  நாம் முந்தைய பகுதியில் லாபத்தை எடுத்திருக்காவிட்டால், இந்த இறக்கம் என்பது, நமக்கு ஒரு பெரிய வலியை கொடுக்கக்கூடிய பகுதி ஆகும்.  இந்த பகுதியில் நாம் ஏற்கெனவே கண்ணில் பார்த்துக்கொண்டு இருந்த லாபம், கண் முன்னாலேயே குறைய ஆரம்பிக்கிறது.
 
இந்த பகுதிதான் நம்மை உணர்வு ரீதியாக பெருமளவு பாதிக்கக்கூடிய பகுதி ஆகும்.  விலைஏறும்போது நாம் கணக்குபோட்டு சந்தோஷமாக ஏற்றத்தை பார்த்திருக்கும்போது, இந்த பகுதி லாபத்தை குறைத்துக்கொண்டே வரும்போது, இதுவரை இருந்த சந்தோஷம் காணாமல் போகிறது.  பல நேரங்களில் இந்த இறக்கம் என்பது நாம் எதிர்பார்ப்பதைவிட வேகமாகக்கூட நிகழலாம்.  இது நம்மை மனரீதியாக பெரும்பாதிக்கும் உள்ளாக்கலாம்.
ஒரு ஸ்விங் டிரேடின் நான்கு நிலைகளை நாம் விவரமாக பார்த்தோம் அல்லவா!
இந்த பகுதிகள் ஒன்று சேரத்து நாம் இதை அப் சுவிங் என்று சொல்கிறோம்.
 
அப் சுவிங:
 
ஒரு அப் சுவிங்கில் நாம் வியாபார ரீதியாக வாங்கி விற்கும் நபராக இருக்கவேண்டும்.  இதை நாம் லாங் என்று ஏற்கெனவே படித்தும் இருக்கிறோம்.  நாம் பார்த்த இந்த அப் சுவிங் பகுதிகளை சில கமாடிட்டிகளிலும் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக தங்கத்தை எடுத்துக்கொள்ளலாம்.
 
தங்கம் – டெய்லி சார்ட்:
 
மேலே உள்ள தினசரி வரைபடத்தில் நாம் அப்சுவிங்கில் பார்த்த அந்த நான்கு பகுதிகளையும் பார்க்கலாம்.  இந்த அப்சுவிங் ஆரம்பித்து முடிவது ஒன்பது தினங்களில் முடிந்து இருக்கிறது. இந்த வரைபடத்தை உற்று நோக்கினால், திசை திரும்பும் இடத்தை எப்படி அனுமானிக்கலாம் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.  முந்தைய நாள் இறங்குமுகமாக உள்ளது அடுத்தநாள் ஏறுமுகமாக மாறுகிறது.  நான் இந்த சுவிங்கில் ஏறிக்கொள்கிறோம்.  பின்பு பகுதி இரண்டை எடுத்துக்கொண்டால் அது ஆறு நாட்களாக மேல்நோக்கிய பயணத்தை தொடர்கிறது.  எனவே நாம் வாங்கிய பொஷிஷனை அப்படியே வைத்துக்கொள்கிறோம்.  அடுத்த விலையானது ஒரு உச்சத்தை தொட்ட பிறகு, தொடர்ந்து ஏற முடியாமல் கீழேநோக்கி திசை திரும்புவதை பார்க்கிறோம்.  இது மூன்றாவது நிலை ஆகும்.  இந்த நிலையில் நாம் வாங்கியதை விற்றுவிட வேண்டும்.  அடுத்து விலை கீழ் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.  இது நான்காவது நிலை ஆகும்.  நாம் வாங்கிய பொஷிஷனை விற்காமல்விட்டால், இந்த இறக்கம் நம் லாபத்தை குறைத்துவிடும் இல்லாவிட்டால், ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.
 
தங்கம் ஒரு மணிநேர வரைபடத்தில்
 
நாம் படித்து வரும் அப் சுவிங்கை ஒருமணி நேர வரைபத்தில்கூட பார்க்கலாம்.  ஆனால் இது குறுகிய காலத்தில் வாங்கி, குறுகிய காலத்தில் விற்பது ஆகும்.  இருந்தாலும். நாம் படித்து வரும் கான்செப்ட், ஒரு சுவிங் எவ்வாறு நிகழ்கிறது என்பது ஆகும்.  மேல உள்ள வரைபடத்தை உற்றுநோக்கும்போது, பொதுவாக ஒரு சுவிங்கில் வர வேண்டிய நான்கு பகுதிகளையும் இந்த மணிதுளி வரைபடத்தில் பார்க்கலாம்.  இந்த வரைபடத்தில் உள்ள அப்சுவிங் 6 – 7 மணிநேரத்தில் நடைபெறுகிறது.  இந்த காலஅளவில் நான் பார்க்கும் லாபம், தினசரி வரைபடத்தில் பார்க்கும் லாபத்தைவிட குறைவாக இருக்கும்.  இருந்தாலும் இங்கும் அந்த சுவிங் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம்.

தங்கம் 15 நிமிட வரைபடம்:
 
மேலே உள்ள தங்கத்தின் 15 நிமிட வரைபடத்தை பார்க்கும்போது, உங்களுக்கு நாம் இதுவரை படித்த ஒரு அப் சுவிங் எவ்வாறு நடைபெறுகிறது. ஒரு அப்சுவிங் முடிந்த பிறகு, எவ்வாறு அடுத்த அப்சுவிங் ஆரம்பிக்கிறது என்பதை தெளிவாக பார்க்கமுடிகிது.  மேலே உள்ள வரைபடத்தில் மூன்று அப்சுவிங்குகள் வாய்ப்புகளை நாம் பார்கமுடிகிறது.  
நாம் படிக்கும் கான்செப்ட் என்பது எப்படி எல்லா காலகட்டதிலும் பொருந்தும் என்பதை விளக்கவே நான் தங்கத்தின் தினசரி வரைபடம், மணிதுளி வரைபடம் மற்றும் 15 நிமிட வரைபடத்தை எடுத்துக்காட்டாக காட்டி உள்ளேன்.
இதுவரை நாம் படித்தது அப் சுவிங் என்ன என்பதும் அதில் எவ்வாறு லாபம் பார்க்கலாம் என்பது ஆகும்.  அடுத்த வாரம் டவுன் சுவிங் பற்றியும் கமாடிட்டியில் அதைபற்றிய சில எடுத்துக்காட்டுகளையும் பார்க்கலாம். 
 

  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP