Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீசல் விலை ரூ.3.37 குறைந்தது!

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (18ஆம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வந்தன.

இந்நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.37 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை குறைப்பு இன்று (18ஆம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 59.27 ரூபாயாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ