Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 390 புள்ளிகள், நிஃப்டி 120 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 390 புள்ளிகள், நிஃப்டி 120 புள்ளிகள் உயர்வு!
 
இன்று காலை ஏற்றத்தோடு காணப்பட்ட பங்குச் சந்தை. தீபாவளி வாரம் என்பதால் சென்செக்ஸ் பற்றும் நிஃப்டி புள்ளிகள் அதிக அளவில் அதிகரித்து வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்தும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 120 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும், ஹரியானா, மஹாராஷ்ட்ரா மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் இந்த ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன. சென்செக்ஸ் 1.4 சதவிகிதமும், நிஃப்டி 1.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.30 ரூபாயாகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 27,300 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ