Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஸ் விலை 5.61 டாலராக நிர்ணயம்...!

இயற்கை எரி வாயு  (காஸ்) விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக  காஸ் விலை ஏற்றப்படாமல் உள்ளது. மேலும், மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டது. இப்போது அந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுகிறது என  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
 
இந்த விலை யேற்றம் வருகிற நவம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். 
கடந்த ஆட்சியில் ரங்கராஜன் குழு  8.4 டாலராக நிர்ணயிக்க  திட்டமிட்டிருந்தது. இது தற்போது  5.61 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச சந்தையில் காஸ் விலை சுமார் 13 டாலராக உள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார்கள் அனலிஸ்ட்கள். 
 
இந்த விலையேற்ற அறிவிப்பால் கேஸ் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் விலை 8 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.  முக்கிய ஆயில் கம்பனிகளாகன் ஒஎன்ஜிசி - 6%, ஹெச்பிசிஎல் -5.46, கெயில் 8.30%, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் - 3.90%  பங்கு விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ