Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

214 நிலக்கரி சுரங்கங்கள் மீது புதிய சட்டம் : மத்திய அரசு

 தடை செய்யப்பட்ட 214 நிலக்கரி சுரங்கங்கள்

மீது சட்டம் கொண்டுவந்தது மத்திய அரசு

 
கடந்த மாதம் 1993ல் இருந்து நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி உச்ச நீதி மன்றம் 214 சுரங்கங்களை ரத்து செய்தது. இதனால் எழுந்துள்ள பிரச்னையை சரிசெய்ய மத்திய அரசு நேற்று சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.இந்த சட்டத்தை கொண்டுவர ஜனாதிபதிக்கு மத்திய அரசு சிபாரிசு செய்துள்ளது.
 
இந்த சட்டத்தின் படி இனி நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் மின்னணு முறையில் நடத்தப்படும் என்றும், இதன் செயல்பாடுகள் அனைத்து வெளிப்படையானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. 
 
இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் நேரடியாக மின்னனு முறையில் பங்கேற்கலாம்.மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சுரங்கங்களை இழந்த நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது தவிர பொதுத்துறை மற்றும்  மாநில மின்சார வாரியங்களுக்கு நேரடியாக சுரங்கங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த ஏலங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வர வழிவகை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் சுரங்கம் அமைந்துள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்காக அந்தந்த மாநிலத்துக்கே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சற்று பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களான ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார் மற்றும் மத்தியபிரதேசம், மராட்டியம், ஆந்திரா ஆகியவை பயனைடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் நிலக்கரியை நம்பி தொழில் செய்யும் நிறுவனங்களும், இந்தியாவில் பதிவு செய்துள்ள அந்நிய நிறுவனங்களும் இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்கலாம் என இந்த அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ