Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின் கட்டண உயர்வு - அக். 30 வரை கருத்து சொல்லலாம்.

  

மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் இந்த மாதம் 31 ஆம் தேதிவரை தெரிவிக்கலாம் என காலக்கெடு நீட்டித்துள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம். 
 
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆணையம் செப். 23, 2014 மற்றும் செப்.24, 2014 அன்று ஆணையத்தால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் ஆணையம் தானே முற்பட்டு தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு 2014 - 15 ஆம் நிதி ஆண்டிற்கு மின் கட்டண வீதத்தினை நிர்ணயம் செய்யும் கருத்துரு மீது மறுப்புரைகள் மற்றும் கருத்துரைகளை 23.10.2014 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
தற்பொழுது மறுப்புரைகள் மற்றும் கருத்துரைகளை தாக்கல் செய்யும் கடைசி நாள் 31.10.2014 வரை நீடிக்கப்பட்டுள்ளது என செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
 
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் மக்களின் கவனம் இருப்பதால் மின் கட்டண உயர்வு மீதான கருத்துக்கள் குறைவான அளவே வந்துள்ளது.  இதனடிப்படையிலேயே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கால நீட்டிப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது என்கிறது மின்துறை வட்டாரங்கள். 
 
கூடுதல் விவரங்களுக்கு 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ