Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சைபர் பாதுகாப்பு செலவுகள் குறைவு!


ஆன்லைன் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், இந்திய நிறுவனங்கள் சைபர் பாதுகாப்புக்காக செய்துள்ள செலவு 17% குறைந்துள்ளதாக பி டபிள்யூ சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சர்வேயில் தெரிய வந்துள்ளது. 

தற்போது சைபர் பாதுகாப்பிற்காக இந்திய நிறுவனங்கள் செய்துள்ள சராசரி செலவுகள் 24.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 29.28 கோடி ரூபாயாக இருந்தது.  ஆனால் ஒரு இந்திய நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட செலவானது 11,834 ரூபாயிலிருந்து (2013), தற்போது 25,254 ரூபாயாக (2014) அதிகரித்திரிக்கிறது (20%) என இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களின் முழுமையான தாக்கங்களை புரிந்து கொள்ளாமல் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அந்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதும் சைபர் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் எனவும், இதனாலேயே சைபர் குற்றங்கள் குறித்த அதிகமான அச்சுறுத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close