Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐடி துறையின் ஆலோசனை குழுவில் டிசிஎஸ்!

 
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஐடி துறை ஆலோசனை குழுவில் ( Information Technology Industry Council)  இடம் பிடித்துள்ளது.  
உலக அளவில் ஐடி துறைக்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த ஆலோசனைக் குழு வழங்கி வருகிறது. 
 
புதிய தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை நெறிப்படுத்துவது, வளர்ந்து வரும் புதிய துறைகளுக்கான அனுமதி வழங்குவது, இ&காமர்ஸ் 
கொள்கைகளை மேம்படுத்துவது, நுகர்வோர் நலன்களை பாதுகாப்பது என ஐடி துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் 
கட்டுப்படுத்தும் அமைப்பு இது. முக்கியமாக ஐடி துறை சீராக இயங்க இந்த குழு வழிகாட்டி வருகிறது. 
 
இந்த குழுவில் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று உறுப்பினராக இணைந்துள்ளதை பெருமையுடன் வரவேற்கிறோம் என்று செய்தி வெளியிட்டுள்ளது ஐடிஐ குழு. இது குறித்து பேசிய இந்த ஆலோசனைக் குழுவின் செயல் அதிகாரி டீன் கர்ஃபீல்டு (Dean Garfield.)
‘இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு உலக நிறுவனத்துக்கான அங்கீகாரம்’’ என்று தெரிவித்துள்ளார். 
 
‘‘ உலக அளவில் ஒவ்வொரு மூலையிலும் உள்ள எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஐடி துறையின் அனைத்து சேவைகளை கொடுத்து வருகிறோம். 
இதுதான் எங்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார் டிசிஎஸ் நிறுவனத்தின் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியங்களின் தலைவரான சூர்யா கான்ட். ((Surya Kant) 
 
‘‘ திறமை மற்றும் விவேகத்துடன் பணியாற்றுவது, போட்டி நிறைந்த சந்தையிலும் வெளிப்படையான செயல்பாடு, கூட்டு முயற்சி இவைதான் எங்கள் வளர்ச்சிக்கு காரணம் என்று விளக்கியுள்ள சூர்யா கான்ட். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐடி துறை வளர உறுதுணையாக இருப்போம் என செய்தி வெளியிட்டுள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ