Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உயரும்!


2013-ம் ஆண்டில் 1.88 டிரில்லியனாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது நடப்பு நிதி ஆண்டில் இரண்டு டிரில்லியன் டாலராக (ஒரு டிரில்லியன் என்பது 1,000 பில்லியன்) உயரும் தருவாயில் இருக்கிறது. இது இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019-ல் மூன்று டிரில்லியன் டாலரை தாண்டும் என்று ஐஎம்எஃப் (International Monetary Fund) அமைப்பானது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருந்துவரும் இந்தியா 2019-ல் ஏழாவது இடத்திற்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு என்கிற பெயருடன் முதல் இடத்தை வகித்து வருகிறது அமெரிக்கா. இதன் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பு 17.42 டிரில்லியன் டாலர். இதற்கு அடுத்த இடத்தில் 10.35 டிரில்லிடன் டாலர் மதிப்புடன் சைனா இருந்து வருகிறது.

2019-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 3.18 டிரில்லியன் டாலர் இருக்கும் என்கிற மதிப்பீட்டைப் போலவே, அமெரிக்கா மற்றும் சைனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முறையே 22.15 டிரில்லியன் டாலர் மற்றும் 15.52 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அதே போல ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முறையே 4.55 டிரில்லியன் டாலர், 3.7 டிரில்லியன் டாலர் மற்றும் 3.39 டிரில்லியன் டாலர்களாக வளர்ந்திருக்கும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP