Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளிக்கு சரவெடி பங்குகள்

 

 தீபாவளிக்கு சரவெடி பங்குகள்

 

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஒரு வருடமாகவே ஏற்றத்தில் இருந்து வருகிறது. மத்தியில் புதிய ஆட்சி அமைந்தது மற்றும் அதனுடைய செயல்பாடு அனைத்தும் மிகவும் பாசிட்டிவாக இருப்பதாலும் பங்குச் சந்தை ஆபார வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தியை பெருக்குவதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மத்தியில் புதிய ஆட்சி அமைந்தோடு, அடுத்த நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் மத்திய அரசுக்கு சாதமாக வெளியாகி உள்ளது.  மத்தியில் ஆளும் பிஜேபி கட்சியே மாநிலங்களிலும் பரவலாக ஆளும் போது வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த முடியும். திட்டங்களை எளிதாக நடைமுறைப்படுத்தவும் முடியும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

மேலும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாகுறை குறையும். இந்தியாவில் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் முக்கிய இடத்தை வகிப்பது கச்சா எண்ணெய்தான். இதன் விலை சரிந்து வருவதால், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறையும் போது பணவீக்க விகிதமும் குறையும். அதோடு மட்டும் இல்லாமல் 2014 செப்டம்பர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 2.38 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவாகும். அதேபோல  நுகர்வோர் பணவீக்க விகிதமும் 6.46 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளம் ஆகும். அதாவது தொடர்ந்து  பணவீக்க விகிதம் குறைந்து வந்தால் அடுத்த ஆண்டு  ஆர்பிஐ வட்டிவிகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைந்தால் கடனுக்கான வளர்ச்சி அதிகரித்து தொழில் துறைகளின் உற்பத்தி பெருகும். இதன் விளைவாக வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். இத்தனை சாதாகமான அறிகுறிகள் இருப்பதால் சந்தை ஏற்றத்திலே இருக்கும் என நம்பப்படுகிறது. 

தீபாவளி முன்னிட்டு வியாழக்கிழமை (23.10.2014) பங்குச் சந்தைகள் விடுமுறை என்றாலும், சென்டிமென்டாக ஒரு மணிநேரத்திற்கு மட்டும் முகூர்த்த டிரேடிங் நடக்கும். இந்த டிரேடிங்கில் முதலீட்டாளர் தீபாவளி அன்று வாங்குவதற்கு சில பங்குகளை பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். 

 இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வழங்கிய பரிந்துரைகள்

பங்கின் பெயர்

விலை 21.10.2014

இலக்கு விலை.

ஆஷியானா ஹவுஸிங் (ASHIANA)

166

202

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட்( CAPF)

293

360

மேக்மணி ஆர்கனிக்ஸ்( MEGH)

21.90

34

பெண்ணார் இண்டஸ்ட்ரீஸ்(PENIND)

52.60

52

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RELIANCE)

928

1111

 

பண்ட்ஸ் இந்தியா டாட்காமின் ஈக்விட்டி ரிசர்ச் ஹெட் பி. கிருஷ்ணகுமாரின் பரிந்துரை.

 

பங்கின் பெயர்

விலை 21.10.2014

இலக்கு விலை.

ஆர்இசிஎல் (RECLTD)

285.40

390

பிபிசிஎல் (BPCL)

687.05

850

 

சென்னை ஆர்எம்ஆர் ஷேர்ஸ்   நிறுவனத்தின் பங்குச்சந்தை நிபுணர்

எஸ். லெட்சும்ணராமனின் பங்கு பரிந்துரைகள்.

 

 

 

பங்கின் பெயர்

விலை 21.10.2014

இலக்கு விலை.

ஹிண்டால் கோ (HINDALCO)

148.05

174

ஃபெடரல் பேங்க்(FEDERALBNK)

140.55

185

எல் ஐ சி ஹவுஸிங் ஃபைனானஸ்(LICHSGFIN)

334.45

400

பேங்க் ஆஃப் பரோடா(BANKBARODA)

883.00

1150

ஹேவல்ஸ் இந்தியா(HAVELLS)

278.70

335

கரூர் வைஸ்யா பேங்க்( KARURVYSYA)

540.50

700

என்டிபிசி( NTPC)

147.15

170

ரேமென்ட் இந்தியா(RAYMOND)

486.50

650

 

டிஸ்க்ளைமர்: முதலீட்டாளர்கள் முதலீடு குறித்த முடிவுகளை சொந்தமாக எடுக்கவும். 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ