Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளியன்று ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 211 புள்ளிகள் அதிகரித்து 26787 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 7995 என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.28 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,509 ரூபாயாக உள்ளது.


குறிப்பாக ஹீரோ மோட்டோ கார்ப், ஜின்டால் ஸ்டீல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், ஐசிஐசிஐ, டிஎல்எஃப் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.


அடுத்த நான்கு நாட்களுக்கு பங்குச்சந்தை விடுமுறை என்பதும். நாளை மட்டும் மாலையில் சிறிது நேரம் முகூர்த் டிரேடிங் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ