Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னும் வந்து சேராத இ-காமர்ஸ் தீபாவளி ஆர்டர்கள்!

இன்னும் வந்து சேராத இ-காமர்ஸ் தீபாவளி ஆர்டர்கள்!

 

சமீபத்தில் அலைந்து திரிந்து வாங்க வேண்டாம் ஆன்லைனே போதும் என்று கணினி திரையை க்ளிக் செய்து ஆர்டர் செய்து விட்டு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்து விடுவார்கள். நான் லக்கேஜ் தூக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தது ஒரு தரப்பு.


இந்நிலையில் இன்று வரும், நாளை வரும் என்று இருந்த பார்சல்கள் நீண்ட நாட்களாகவே டெலிவரி ஹப்பில் இருப்பதாக தகவல் நிலை இருந்து வந்தது. தற்போது தீபாவளியே முடிந்துவிட்ட நிலையில் தீபாவளிக்கு ஆர்டர் செய்த பொருட்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர் வாடிக்கையாளர்கள்.
 

இது குறித்து திருச்சியை சேர்ந்த ஒருவர் கூறிய போது ''நான் 4000 மதிப்புள்ள டிவிடி ப்ளேயரை ஆஃபர் விலையில் 2500 ரூபாய்க்கு ஆர்டர் செய்தேன். தீபாவளிக்கு முன் வீட்டுக்கு வந்து விடும் என்று தெரிவித்தனர். ஆனால் இன்னமும் வரவில்லை. கேட்டால் இன்னும் இரண்டு நாளில் வந்துவிடும் என்கின்றனர் என்றார்.

இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த ஒருவர் நான் கேஷ் ஆன் டெலிவரியில் தான் வாங்கியுள்ளேன். இவர்கள் தாமதப்படுத்தியதால் நான் பரிசளிக்க நினைத்தவருக்கு கடையில் ஆங்கி பரிசை கொடுத்துவிட்டேன். இப்போது வந்தால் ரிட்டர்ன் செய்து விடுவேன் என்றார்.

இப்படி நாடு முழுவதும் ஒவ்வொரு ஹப்பிலும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சுமார் 500 பார்சல்கள் தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது. அதிகமான ஆர்டரை ஒரே நாளில் குவிக்க நினைத்த நிறுவனங்கள்  அதற்கான டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் காட்டிய அலட்சியம் தான் இந்த தேக்கத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர். சரியான உள்கட்டமைப்பு இல்லாததும், வரி சிரமங்களும் தாமதத்திற்கு காரணங்களாக முன் வைக்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள். மேலும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் சரியான அணுகுமுறையின்மையும் காரணமாக முன் வைக்கப்படுகின்றன.

பணத்தை ஏற்கெனவே செலுத்தியவர்கள் வழியில்லாமல் பொருளை வாங்கினாலும். கேஷ் முறையில் வாங்கியவர்களில் பெரும்பாலானோர்  வந்தால் திருப்பி அனுப்பிவிட வேண்டியது தான். ஒரு பொருளுக்கு எத்தனை முரை செலவழிப்பது என்கின்றனர். வரும் 2021ல் 90 பில்லியன் டாலர் மதிப்பை இந்த துறை அடையும் என கணிக்கும் வேளையில் இதுபோன்ற தவறுகளை இ-காமர்ஸ் நிறுவனங்கள் திருத்தி கொண்டால் தான் நல்லது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ