Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பாட் யுவர் ட்ரெயின் ஆப்ஸ் அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே

ஸ்பாட் யுவர் ட்ரெயின் ஆப்ஸ் அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே
 

புதிதாக ஒரு ஊருக்கு செல்லும் போது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் ரயிலில் எந்த இடத்தில் ரயில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதை இனி அருகில் இருப்பவரிடம் கேட்க வேண்டாம். அதற்கு தான் புதிய ஆப்ஸை அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்திய ரயில்வே.


அது மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில்களும் அதன் பயண விவரங்களும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.தற்போது எந்த ஸ்டேஷனில் இருக்கிறோம், அடுத்த ரயில் நிலையத்தை எப்போது அடைவோம். இது தவிர ரயில்களின் முன்பதிவு விவரம், இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில்களின் விவரம்.


ரத்து செய்யப்பட்ட ரயில்கள், நேரம் மாற்றப்பட்ட ரயில்கள், பாதை மாற்றிவிடப்பட்ட ரயில்கள் என அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் இந்த ஆப்ஸை வெளியிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.இந்த ஆப்ஸ் வெளியாகிய ஒரு வாரத்தில் 5 லட்சம் டவுன்லோடை தாண்டியுள்ளது. மேலும் 5க்கு 4.3 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.


இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்ய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=cris.icms.ntes

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ