Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

இன்றைய நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிந்து 26752 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 7991 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.30 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,204 ரூபாயாக உள்ளது.

 காலை நிலவரம்:

 இந்திய சந்தைகள் இன்று(27.10.2014) காலை 9:45 மணி நிலவரப்படி ஏற்றத்தில் துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 23 புள்ளிகள் அதிகரித்து 26874 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 6 புள்ளிகள் அதிகரித்து 8021 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.24 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,176 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக ஹச்டிஎஃப்சி,இந்தஸ்இந்த் வங்கி நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், ஜிடால் ஸ்டீல்,டிஎல்எஃப் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP