Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் முதல்கட்ட பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளது மத்திய அரசு.

 
இந்தப் பட்டியலில் டாபர் குழுமத்தின் முன்னாள் இயக்குநர் பிரதிப் பர்மன், ராஜ்கோட் பகுதியைச்சேர்ந்த பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த ராதா எஸ். டிம்போலா ஆகிய 3 பேரின் பெயர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.இன்னும் பலரின் பெயர்கள் மத்திய அரசால் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்நிலையில் கருப்பு பணம் வைத்துள்ளதாக டாபர் குழுமத்தின் முன்னாள் இயக்குநர் பிரதிப் பர்மன் அறிவிக்கப்பட்டதையடுத்து டாபர் இந்தியா பங்குகளின் விலை 9% குறைந்தது! இன்று ஒரு நாளில் மட்டும் 50 லட்சம் பங்குகள் கைமாறின!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close