Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பெயர் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல்: அருண் ஜெட்லி!

 கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பெயர் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல்: அருண் ஜெட்லி!

 
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள 600 பேர் பெயர் பட்டியலை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று அருண் ஜெட்லி கூறினார்.
 
கருப்பு பணம் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவருடைய பெயர் பட்டியலையும் உடனடியாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
 
இது தொடர்பாக டெல்லியில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள அனைவருடைய பெயரையும் வெளியிடுவதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
 
இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவர் ஒருவரையும் பாதுகாக்க நினைக்கவில்லை. இதில் உண்மையை கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு விரும்புகிறது. மேலும், குற்றம் புரிந்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
 
இதற்கிடையே கடந்த திங்களன்று முதற்கட்டமாக மூன்று பெயர்களை வெளியிட்டது மத்திய ஆரசு ஆனால் அந்த பட்டியலில் எந்த அரசியல்வாதியின் பெயரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் அனைவருடைய பெயர் பட்டியலையும் இன்று (29.10.14) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்" என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ